பிரதமர் லீயின் இன்ஸ்டகிராம் பதிவுக்குச் சமூக ஊடகவாசிகள் பாராட்டு

பிரதமர் லீயின் இன்ஸ்டகிராம் பதிவுக்குச் சமூக ஊடகவாசிகள் பாராட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Oct 2023 - 3:10 pm

1 mins read

பிரதமர் பதவியேற்றபின் முதல்முறையாக சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்‌ரேத்தா தவிசின், தமது பயணத்தை முடித்துக்கொண்டுள்ளதை அடுத்து அது தொடர்பில் பிரதமர் லீ சியன் லூங் இன்ஸ்டகிராமில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

காணொளியில் ‘கூட் டைம்’ என்ற தாய்லாந்து பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்கிறது.

இதையடுத்து, திரு லீயின் இன்ஸ்டகிராம் கணக்கைப் பின்தொடரும் ஊடகவாசிகள் பலர், தாய்லாந்துப் பாடலைப் பயன்படுத்திய முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.

பதிவில் திரு லீ, “வட்டாரமும் இரு நாட்டு மக்களும் பலனடையும் வகையில் பிரதமர் ஸ்‌ரேத்தாவுடன் அணுக்கமாக இணைந்து செயல்படுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆசியான் வட்டாரத்தில் சிங்கப்பூரும் தாய்லாந்தும் நெருங்கிய பங்காளிகள் என்றும் திரு லீ சுட்டினார்.

“எங்களின் பொருளியல், வர்த்தக இணைப்புகள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன. அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகளில் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்,” என்றும் பதிவிட்டிருந்தார் பிரதமர் லீ.

இருநாட்டு கல்விக் கழகங்களிடையிலான பங்காளித்துவ உறவும் வளர்ந்து வருவதாக அவர் கூறினார். இயற்கை எழில், கலாசாரம், உணவு, பொருள் வாங்குவது என சிங்கப்பூரர்கள் தாய்லாந்துக்கு விரும்பிச் செல்வதும் தாய்லாந்து மக்கள் சிங்கப்பூர் வருவதுமாக உள்ள நிலையையும் திரு லீ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துலீ சியன் லூங்

தொடர்புடைய செய்திகள்