நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் 2024ஆம் ஆண்டு முதல் முதுநிலைப் படிப்புக்கு 5,000 வெள்ளி மானியம் பெறலாம்.
இந்த மானியம் பாட அடிப்படையிலான முதுநிலைப் படிப்புகளுக்கு மட்டும் பொருந்தும்.
மாணவர்கள் தங்கள் துறையில் மேலும் மெருகேற்றிக்கொள்ள பாட அடிப்படையிலான முதுநிலைப் படிப்புகள் உதவும்.
இந்த மானியம் முழு நேரமாக படிப்பவர்களுக்கும், பகுதி நேரமாகப் படிப்பவர்களுக்கும் கிடைக்கும்.
நிதியுதவி பெறும் மாணவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான மானியம் கிடைக்கும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களுக்கு கூடுதலாக மேலும் படிப்புச் செலவில் 10 விழுக்காடு வரை மானியம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மானியத்தால் 5,200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் முதுநிலைப் படிப்பு என்பது எட்டாக்கனியாக இருக்கக்கூடாது என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது. அதனால் இந்த மானியத் திட்டத்தை அறிவித்ததாக அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் இதே போன்று முதுநிலைப் படிப்புகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

