குறைந்த எரிசக்தியில் குளுமை: பேராசிரியருக்கு உயரிய விருது

குறைந்த எரிசக்தியில் குளுமை: பேராசிரியருக்கு உயரிய விருது

1 mins read
39987b34-7367-49b7-9e59-894bd2cc3f3b
பேராசிரியர் சியூ செங் வெய், அதிபர் அறிவியல் தொழில்நுட்ப விருது வென்றார். - படம்: எஸ்டி
Google News Preferred Icon

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வடிவமைப்பு, பொறியியல் பள்ளி துறைத் தலைவரின் இருக்கைப் பேராசிரியர் சியூ செங் வெய், 42, அதிபர் அறிவியல் விருதை வென்று இருக்கிறார்.

2023 அதிபர் அறிவியல், தொழில்நுட்ப விருது விழா இஸ்தானாவில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூரின் அறிவியல் ஆய்வு அறிஞர்களையும் பொறியாளர்களையும் சிறப்பிக்கும் வகையில் வழங்கப்படும் ஆக உயரிய விருது இதுவே ஆகும்.

அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் தனிச் சிறப்புமிக்க தொண்டு ஆற்றுவோருக்கு ஆண்டுதோறும் அந்த விருது வழங்கப்படுகிறது.

உலகில் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகமாகி வருகிறது.

இந்தச் சூழலில், குறைவான எரிசக்தியைப் பயன்படுத்தி கட்டடங்களைக் குளுமைப்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகளை அவர் சாதித்து இருக்கிறார்.

குவாண்டம் இயந்திர அலை கோட்பாட்டைப் பயன்படுத்தி நவீன வழிகளில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம். குளுமை படுத்த வேண்டிய தேவை உள்ள சாதனங்களின் ஆற்றலை அதிகப்படுத்தலாம் என்று பேராசிரியர் சியூ கண்டறிந்தார்.

குறிப்புச் சொற்கள்