வரி செலுத்தப்படாத மதுபானம் தொடர்பாக மூவருக்குத் தலா $200,000க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.
சிங்கப்பூரரான வாங் பென்ஷிக்கு $220,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது மனைவியும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான யான் லிபிங்கிற்கு $203,000 அபராதம் விதிக்கப்பட்டது. யான் லிபிங்கின் சகோதரரும் சீன நாட்டவருமான யான் பிங்செங்கிற்கும் அதே தொகை அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த மூவரிடமிருந்து வரி செலுத்தப்படாத 259 மதுபானப் புட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர்கள் $28,317 வரித் தொகை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அபராதம் செலுத்துவதற்குப் பதிலாக யாங் பிங்செங் 53 நாள்கள் சிறைத் தண்டனையை அனுபவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 11ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் அவென்யூ 6 அருகில் இந்த மூவரும் அதிகாரிகளிடம் சிக்கினர்.