மருத்துவமனை ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசிவிட்டு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காணொளியில் பதிவிட்ட பெண்ணுக்கு புதன்கிழமை ஐந்து வாரங்கள் ஐந்து நாள்கள் சிறைத் தண்டனையும் 600 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
அச்சம்பவம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்தது. அது பதிவான காணொளியை இணையத்தில் பலர் பகிர்ந்தனர்.
அதைத் தவிர அதுபோன்ற மேலும் சில குற்றங்களையும் 29 வயது ஹான் ஃபெய்ஸி புரிந்திருக்கிறார்.
பாதுகாவல் அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட செயல்களின் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஹான் ஃபெய்ஸி ஒப்புக்கொண்டார்.

