மின்னியல் துறையின் மீட்சி; சற்றே சரிந்த செப்டம்பர் மாத உற்பத்தி

மின்னியல் துறை குறிப்பாக பகுதி மின்கடத்திகளின் தேவை மீண்டிருப்பதால், ஓராண்டு கால சரிவுக்குப் பிறகு உற்பத்தித் துறை மீட்சி காணும் என்ற நம்பிக்கையை செப்டம்பர் மாத உற்பத்தி புள்ளி விவரங்கள் தந்துள்ளன.

மொத்த தொழிற்சாலை உற்பத்தி செப்டம்பரில் 2.1 விழுக்காடு சரிந்தது. எனினும், இது ஆகஸ்டில் பதிவான 12.1 விழுக்காட்டு சரிவில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்பதை பொருளியல் வளர்ச்சிக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.

புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் ஆய்வாளர்கள் முன்னுரைத்த 4.5 விழுக்காட்டு சுருக்கத்தை விடக் குறைவு.

ஏற்ற இறக்கமாக இருக்கும் உயிரியல் மருத்துவத் துறையைத் தவிர்த்து, தொழிற்சாலை உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் 2.7 விழுக்காடாகக் குறைந்து பின்னர், 0.1 விழுக்காடு உயர்ந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் 18.9 விழுக்காடு சுருங்கிய பிறகு, முக்கிய மின்னியல் துறையில் உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 10.2 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டது.

மின்னியல் துறையில், தகவல் தொடர்பு, பயனீட்டாளர் மின்னியல் போன்றவற்றின் உற்பத்தி 21.6 விழுக்காடும், பகுதி மின்கடத்திகள் 13.5 விழுக்காடும், ஏனைய மின்னியல் பொருள்கள் 4.7 விழுக்காடும் அதிகரித்தன. கணினி சாதனங்கள், தரவு சேமிப்பு 22.7 விழுக்காடு குறைந்துள்ளது.

உயிரியல் மருத்துவத் துறையானது செப்டம்பரில் ஆண்டு அடிப்படையில் உற்பத்தி 18.9 விழுக்காடு சரிந்தது.

இத்துறையில் மருந்துப் பிரிவின் உற்பத்தி ஓராண்டுக்கு முன்பிருந்ததை விட, 41.4 விழுக்காடு சுருங்கியது. எனினும், மருத்துவ சேவைகளுக்கான வலுவான ஏற்றுமதி தேவையால், மருத்துவ தொழில்நுட்பப் பிரிவு 9.3 விழுக்காடு விரிவடைந்துள்ளது.

2022ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிட, போக்குவரத்து பொறியியல் உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 13.2 விழுக்காடு வளர்ந்தது.

கப்பல் கட்டும் தளங்களில் அதிக அளவிலான செயல்பாடுகள் மற்றும் எண்ணெய், எரிவாயுத் துறை உபகரணங்களின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கடல், கடல்சார் பொறியியல் பிரிவு 24.7 விழுக்காடு விரிவாக்கத்துடன் முன்னணியில் உள்ளது.

விமான உதிரிப் பாகங்களுக்கு அதிகரித்துள்ள தேவை, வலுவான விமானப் பயணத் தேவைகளின் பின்னணியில் வணிக விமானச் சேவை நிறுவனங்களிடமிருந்து அதிக பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் வேலைகள் ஆகியவற்றின் விளைவாக விண்வெளிப் பிரிவு 14.8 விழுக்காடு வளர்ந்தது.

துல்லியப் பொறியியல் துறையின், உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 10.4 விழுக்காடு சரிந்தது.

பேட்டரி, கட்டுமான உலோகத் தயாரிப்புகளின் உற்பத்தி குறைந்ததால் பொது உற்பத்தித் துறையின் உற்பத்தி செப்டம்பர் 2022 உடன் ஒப்பிட 10.3 விழுக்காடு சரிந்தது.

ரசாயனத்துறையும் ஆண்டு அடிப்படையில் 12.9 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. பெட்ரோலிய ரசாயனம், பெட்ரோலியப் பிரிவுகள் பொதுவாக பலவீனமான சந்தைத் தேவையால் பாதிக்கப்பட்டன. மேலும் ஆலை பராமரிப்பு பணி நிறுத்தங்களால் பெட்ரோலிய ரசாயன உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!