தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த விரைவில் மசோதா

1 mins read
b86ba84e-ed2e-49bd-a2e2-82b3fdbe6c3a
ஜூரோங் ஈஸ்ட்டில் திறக்கப்பட்டுள்ள தேசிய உணவு அறிவியல் நிலையத்தில் புத்தாக்க வழியில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை அமைச்சர் கிரேஸ் ஃபூ பார்வையிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் புதிய உணவுகள் புத்தாக்க வழியில் தயாரிக்கப்படுகின்றன.

உயிருள்ள கோழிக்குப் பதிலாக சோதனைச் சாலையில் உருவாக்கப்படும் கோழி இறைச்சி, மரபணு மாற்றப்பட்ட காய்கறி போன்றவை அவற்றில் அடங்கும்.

இவற்றை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக புதிய மசோதாவுக்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு, பாதுகாவல் மசோதா, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்படும் அதிகாரத்தையும் முடிவு செய்யும்.

உதாரணமாக அரிசி இருப்பு உத்தரவாதத்துக்கு அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரங்களை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வெள்ளிக்கிழமை அன்று சுட்டிக்காட்டினார்.

அரிசி இருப்பு திட்டம், சிங்கப்பூர் சந்தையில் போதுமான அரிசி இருப்பதை உறுதி செய்கிறது. அரிசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட கிடங்குகளில் நிலையான அளவு அரிசி இருப்பில் வைத்திருப்பது கட்டாயமாகும்.

ஜூரோங் ஈஸ்டில் சிங்கப்பூர் உணவு அமைப்பின் இடம் மாற்றப்பட்ட தேசிய உணவு அறிவியல் நிலையத் திறப்பு விழாவில் அமைச்சர் பேசினார்.

உணவு தொடர்பான தற்போதுள்ள எட்டு சட்டப் பிரிவுகளை மசோதா ஒருங்கிணைக்கும் என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

ஆனால் எப்போது மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்