தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலர் பள்ளிகளுக்கான விருதுகள்

2 mins read
217e56cb-6d24-4e71-ae71-2147e49a2291
‘இசிடிஏ’ விருது பெற்றவர்களுடன் சமுதாய, குடும்ப மேம்பாடு, உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் (வலமிருந்து ஆறாவது​), பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) தலைமை நிர்வாகி டான் சீ வீ (வலமிருந்து ஏழாவது). - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் பாலர் பருவ கொண்டாட்ட மாநாடு (இசிசிசி) 2023, அக்டோபர் 27, 28ஆம் தேதிகளில் நடைபெற்றது.

‘சிறுவர்கள் கற்கும் விதத்தைக் கற்றல், நடைமுறைகளை ஒன்றிணைந்து மாற்றுதல்’ என்ற கருவோடு நடைபெற்ற இம்மாநாடு ‘இசிடிஏ’வின் பத்தாம் ஆண்டு நிறைவையும் கொண்டாடியது.

‘இசிசிசி’யின் இரண்டாவது நாளில், சமுதாய, குடும்ப மேம்பாடு, உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் இருவரும் கடந்த பத்தாண்டில் பாலர் பருவத் துறையின் வளர்ச்சியைப் பாராட்டிப் பேசினர்.

இந்த மாநாட்டில் , சிறந்த பாலர் பருவப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்குமாக 24 ‘இசிடிஏ’ விருதுகள் வழங்கப்பட்டன.

பாலர் பள்ளிக்கான தலைசிறந்த கற்றல் கற்பித்தல் விருதைப் பெற்ற ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி (செங்காங் சதுக்கம்), அதன் மாணவர்கள் பங்கேற்ற சில முக்கிய நடவடிக்கைகளைப் பகிர்ந்தது.

‘சிறிதாகத் தொடங்கி பெரிதாகக் கனவு காணவும்’ (எஸ்எஸ்டிபி) எனும் செயல்திட்டத்தின்கீழ் ‘செயிண்ட் லியூக்ஸ்’ இல்ல மூத்தோர்க்கு நீடித்த நிலைத்தன்மை அம்சம் பொருந்திய அன்பளிப்புகளை இப்பள்ளி மாணவர்கள் உருவாக்கினர்.

இதன்வழி மூத்தோரை அன்பாகப் பராமரிக்க மாணவர்கள் கற்றுக்கொண்டனர். பெற்றோரும் மறுசுழற்சிக்கான பொருள்களைத் தேர்ந்தெடுத்து உதவினர்.

களிமண் வடிவமைத்தல், கதைப்புத்தக இயற்கை நடை, ஒளி விளையாட்டு போன்ற புத்தாக்கங்களையும் இப்பள்ளி நடைமுறைப்படுத்தியது.

‘இசிசிசி’ மாநாட்டில், சிங்கப்பூர் பாலர் பள்ளி தர நிர்ணயக் கட்டமைப்பு (ஸ்பார்க்) சான்றிதழ் வழங்குதலும் ‘எஸ்எஸ்டிபி’ நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற்றன.

ஸ்பார்க் சான்றிதழ் பெற்ற பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 1,052ஐ எட்டியுள்ளது. சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் 50%க்கும் மேற்பட்டவை இவற்றில் அடங்கும்.

ஒன்பதாவது ஆண்டாக நடைமுறைப்படுத்தப்படும் ‘எஸ்எஸ்டிபி’ செயல்திட்டத்தில் இவ்வாண்டு 1,130 பாலர்பள்ளிகளிலிருந்து 77,000 சிறுவர்கள் பங்குபெற்றனர். இவர்கள் மொத்தம் 2.7 மில்லியன் மணி நேர சமூகச் சேவையை ஆறு மாதங்கள் செய்து, $316,000க்கும் மேற்பட்ட நிதியைத் திரட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்