சிங்கப்பூரின் ஆகப்பெரிய ‘ஆக்டிவ் எஸ்ஜி’ உடற்பயிற்சிக்கூடம் திறப்பு

1 mins read
25087fc1-9f10-4c19-b6b4-3bb166b1be0a
இரு நடன அரங்குகளுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடம், 1,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. - படம்: ஸ்போர்ட்எஸ்ஜி

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், ‘ஆக்டிவ் எஸ்ஜி’யின் ஆகப்பெரிய உடற்பயிற்சிக்கூடத்தைப் பயன்படுத்தலாம்.

இரு நடன அரங்குகளுடன் கூடிய அந்த உடற்பயிற்சிக் கூடம், 1,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

செம்பவாங்கில் உள்ள ‘ஆக்டிவ் எஸ்ஜி ஸ்போர்ட் சென்டர்@புக்கிட் கேன்பரா’வின் நிறைவைக் குறிக்கும் விதமாக, அந்த உடற்பயிற்சிக்கூடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. அந்த விளையாட்டு நிலையத்தில் நான்கு நீச்சல் குளங்களும் உள்ளன.

உடற்பயிற்சிக்கூடத்தையும் நீச்சல் குளங்களையும் பயன்படுத்த 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு அனுமதி இலவசம்.

வழக்கமான எடைகளுக்குப் பதிலாக, காற்று அழுத்தத்தைப் பயன்படுத்தும் ‘எச்யுஆர்’ இயந்திரங்கள் இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் இடம்பெறுகின்றன.

பயனாளர்கள் பாதுகாப்பாகவும் ஆக்ககரமாகவும் உடற்பயிற்சி செய்ய இவை வகைசெய்வதாக ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை கூறியது.

உடற்பயிற்சிக்கூடத்துக்குப் பக்கத்தில் உள்ள இரு நடன அரங்குகள், ஸும்பா, யோகா போன்ற பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கும்.

விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தின்கீழ் புதிய விளையாட்டு நிலையம் அமைகிறது. சிங்கப்பூரர்கள் அனைவரும் புத்தாக்கமிக்க, ஏற்புடைய, எளிதில் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துவதை இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்