இவ்வாண்டு தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதத்தின் முதல் நாள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டது. பின்னர் எவர்ட்டன் பார்க் பல்நோக்கு மண்டபம், ஜாலான் புக்கிட் மேரா புளோக் 141, புக்கிட் பெர்மாய் புளோக் 109, தெலுக் பிளாங்கா ரைஸ் புளோக் 29 ஆகிய இடங்களில் வெள்ளி ரதம் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு நள்ளிரவு வாக்கில் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
வெள்ளி ரதம். - படம்: த. கவி
வெள்ளி ரதம். - படம்: த. கவி
வெள்ளி ரதம். - படம்: த. கவி

