தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஐஏ $1.44 பில்லியன் நிகர லாபம் ஈட்டியது

1 mins read
f801e98e-47b8-4965-9c07-abbd702c6710
எஸ்ஐஏ விமானம் - படம்: ராய்ட்டர்ஸ்

வலுவான பயணத் தேவையால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் செப்டம்பர் இறுதி வரையிலான அரையாண்டில் $1.44 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

ஓராண்டுக்கு முந்திய இதே காலகட்டத்திற்கான $927 மில்லியன் நிகர லாபத்துடன் ஒப்பிட, இது 55 விழுக்காடு அதிகமாகும். செயல்பாட்டு லாபம் 1.55 பில்லியன் வெள்ளி. இது 26 விழுக்காடு உயர்வு.

வருவாய் 9 விழுக்காடு அதிகரித்து 9.16 பில்லியன் டாலராக இருந்தது.

நிறுவனம் 10 காசு இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது. மொத்தம் $297 மில்லியனை அது ஈவுத்தொகையாக வழங்குகிறது..

எஸ்ஐஏ அதன் மலிவுக் கட்டண சேவையான ஸ்கூட்டுடன் சேர்ந்து, ஏப்ரல்-செப்டம்பர் 2023 காலகட்டத்தில் 17.4 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 52.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்