பாதுகாப்பு அதிகாரிகளையும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஊழியர் ஒருவரையும் வசை பாடிய குற்றத்துக்காக சீன நாட்டவரான ஹான் ஃபைசிக்கு அக்டோபர் மாதம் 25ஆம் தேதியன்று ஐந்து வாரங்கள், ஐந்து நாள்கள் சிறைத் தண்டனையும் $ 600 அபராதமும் விதிக்கப்பட்டன.
மருத்துவமனையில் காவல்துறை அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதத்தை அவர் காணொளி எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.
29 வயது ஹான், தமது வேலை அனுமதி அட்டை விண்ணப்பப் படிவத்தில் பொய்த் தகவல் சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கு மீண்டும் வர ஹானுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.