தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் ஹில்லமன் சிங்கப்பூரில் $27 மி. ஆலையை அமைக்கிறது

பொதுவான நோய்களுக்கு சிங்கப்பூரில் மலிவுக் கட்டணத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பெரிய அளவிலான தயாரிப்பு வசதி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

27 மில்லியன் வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, தொற்றுநோய் பரவல் ஏற்பட்டால் புதிய தடுப்பு மருந்து உற்பத்திக்கு எளிதில் மாறக்கூடிய வசதியைக் கொண்டது.

இது ஹில்லமன் லபோரிட்டரிசின் ஐந்து ஆண்டு கால $80 மில்லியன் முதலீட்டின் ஒரு பகுதியாகும். இது பயோபாலிஸ் ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகத்தையும் கொண்டுள்ளது.

ஏக்ஸ் என்று அழைக்கப்படும் புதிய 30,000 சதுர அடி உற்பத்தி நிலையம் டெப்போ ரோட்டில் அமைந்துள்ளது. சாதாரண நேரத்தில் நோய்த் தடுப்பு மருந்தின் தொடக்கநிலை மருத்துவ வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

இது அதன் ஆய்வு, மேம்பாட்டு ஆய்வகத்துடன் இணைந்து செயல்படுகிறது,

சிங்கப்பூருக்கும் குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்காகவும் உயிருள்ள உயிரணு அல்லது உயிரினங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருள்களைக் கொண்ட உயர் மதிப்புள்ள தடுப்பு மருந்து, உயிரியல் மருந்துகள் போன்றவற்றைத் தயாரிக்கும்.

ஹில்லமன் லபோரிட்டரிஸ், அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான மெர்க் & கோ, பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான வெல்கம் டிரஸ்ட் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.

அதன் ஆய்வுத் திட்டங்களில் ஒன்று, அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்புடன் (ஏ ஸ்டார்) இணைந்து ரிபோநியூக்ளிக் அமிலம் அல்லது சிர்னாவின் ஆற்றலை ஆராய்கிறது.

இது ஆர்.என்.ஏ நோய்த் தடுப்பு மருந்து தொழில்நுட்பத்தின் ஒரு வடிவமாகும்,

உருமாறும் வைரஸ் கிருமி இனங்களுக்கு ஏற்ப தடுப்பு மருந்தை மாற்றியமைப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை உள்ளடக்கியது. மேலும். நோய்ப்பரவல் ஏற்படும்போது விரைவாக செயலாற்றக்கூடியது. அத்துடன் இதை 2 டிகிரி செல்சியல் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வழக்கமான குளிர்சாதன வெப்பநிலையில் வைத்திருக்க முடியும்.

எதிர்கால அல்லது நெருக்கடி நிலை தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை விரைவுபடுத்த எளிதாகவும் மாற்றியமைக்கக் கூடியாதாகவும் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய தொற்றுநோய் ஏற்படும்பட்சத்தில் தற்போதைய செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாமல், புதிய தடுப்பு மருந்தை இங்கு தயாரிக்கலாம்.

டெங்கி, ரோட்டா வைரஸ், காலரா, நுரையீரல் நோய், மெனிங்கோகோகல் நோய்கள் போன்ற பரவலான தொற்றுநோய்களுக்கு இந்த நிறுவனம் தடுப்பு மருந்து தயாரிக்கும்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு நோய்த் தடுப்பு மருந்கை உற்பத்தி செய்யும் ஒரு வசதி கூட இல்லாத நிலையிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரில் ஐந்து தடுப்பு மருந்து தயாரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஹில்லமன் ஆய்வகங்களைத் தவிர, இங்கு செயல்படும் பிற தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களான எம்எஸ்டி, தெர்மோ ஃபிஷர் சயன்டிஃபிக், பிரெஞ்சு நிறுவனமான சனோஃபி, ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக் ஆகியவை ஆகும்.

ஜிஎஸ்கே, ஜூலை மாதத்தில், துவாஸில் $343 மில்லியன் தடுப்பு மருந்து தயாரிப்பு ஆலை கட்டுமானத்தைத் தொடங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!