தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதன்முறையாக திறந்தவெளி வீவக வாகன நிறுத்துமிடங்களில் மின்சார வாகன மின்னூட்டு இயந்திரங்கள்

2 mins read
0d33943c-2b98-4054-872a-0aa222d6e9d2
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் இருக்கும் புளோக் 209 வாகன நிறுத்துமிடத்தில் உள்ள மின்சார வாகன மின்னூட்டு இயந்திரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

முதன்முறையாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளின் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்களில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அத்தகைய ஆறு மின்னூட்டும் இயந்திரங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

அவை ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் இருக்கும் புளோக் 209ன் வாகன நிறுத்துமிடத்தில் உள்ளன. அவை, நவம்பர் மாதம் ஏழாம் தேதியிலிருந்து செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

பொது வாகன நிறுத்துமிடங்களில் அதிக எண்ணிக்கையில் மின்சார வாகன மின்னூட்டு இயந்திரங்களைப் பொருத்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏலக் குத்தகை விடப்பட்டது. அதன்கீழ் இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன.

அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், புக்கிட் மேரா ஆகிய வட்டாரங்களிலும் இவ்வாண்டிறுதிக்குள் மின்னூட்டும் இயந்திரங்கள் பொருத்தப்படும் என்று அப்பணியை மேற்கொள்ளும் இவி-எலெக்ட்ரிக் சார்ஜிங் (இவிஇ) அமைப்பு தெரிவித்தது. இவிஇ, நிலப் போக்குவரத்து ஆணையத்தின்கீழ் இயங்கும் அமைப்பு.

அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி 500 பொது வாகன நிறுத்துமிடங்களில் சுமார் 1,600 மின்னூட்டும் இயந்திரங்களைப் பொருத்த இவிஇ திட்டமிட்டுள்ளது. மேலும் 240 வாகன நிறுத்திமிடங்களில் 860 இயந்திரங்களைப் பொருத்துவதற்கான பணிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட ஏலக் குத்தகையின்கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் ஐந்து நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2,000 வீவக வாகன நிறுத்துமிடங்களில் குறைந்தது 12,000 மின்னூட்டும் இயந்திரங்களைப் பொருத்தும்.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21 புளோக் 209 வாகன நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள இயந்திரங்களை சார்ஜ்+ நிறுவனம் நிர்வகிக்கிறது. அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்களில் மின்னூட்டு இயந்திரங்கள் உள்ள இடங்களில் மோட்டார்சைக்கிள்களுக்கான பகுதியும் வரையப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் மாத இறுதியில் 9,999 மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 2022ஆம் ஆண்டு இறுதியில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 53.1 விழுக்காடு அதிகம்.

எனினும், தற்போது செயல்பாட்டில் இருக்கும் 142,724 மோட்டார்சைக்கிள்களில் 266 மட்டுமே மின்சாரத்தில் இயங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்