விமானத்தில் ஏற்பட்ட ‘செயலிழப்பு’ காரணமாக சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் எஃப்16 ரக போர் விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.
அது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஆகாயப்படை, அந்தப் போர் விமானம் பிற்பகல் 12.10 மணிக்குத் தரையிறங்கியபோது, அதன் ஒரு சக்கர டயரில் காற்று இல்லாமலிருந்தது என்று குறிப்பிட்டிருந்தது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
விமான நிலைய ஓடுதளத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட போர் விமானம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது.

