தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய உறவை வளர்த்துக் கொள்ள அமெரிக்காவுக்கு பிரதமர் லீ வேண்டுகோள்

2 mins read
41bb4bbb-9b84-470e-b035-4e1110cc96e5
சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் சிங்கப்பூர் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு அலுவலகத்தை பிரதமர் லீ நவம்பர் 14ஆம் தேதி திறந்து வைத்தார். - படம்: லியன் ஹ சாவ் பாவ்

சான் ஃபிரான்சிஸ்கோ: உலக வர்த்தகத்தை பாதுகாப்பு குறித்த கவலைகள் அச்சுறுத்தும் நிலையில் அமெரிக்கா ஆசிய நாடுகளுடனான தனது உறவை தொடர்ந்து வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் எனத் தான் நம்புவதாக பிரதமர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.

“தற்போதைய சிக்கலான உலக சூழலில், தடையற்ற வர்த்தகம், பொருளியல் நலன் தொடர்பான அம்சங்களை முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பு கவலைகள் பின்னுக்குத் தள்ளிவிட்டன,” என்று சிங்கப்பூர் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு அலுவலகத்தை சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் திறந்துவைத்துப் பேசிய திரு லீ கூறினார்.

“எனினும், இந்தப் போக்கு ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா ஆசியா, உலக நாடுகளுடனான தனது உறவுகளை நீட்டிப்பதுடன் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் என்றும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

“ஏனெனில், உலக நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் ஒன்று மற்றொன்றுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்ய வேண்டியுள்ளது. அது நம் அனைவரின் ஒட்டுமொத்த வளத்துக்காக மட்டுமல்லாது அனைத்துலக ஒத்துழைப்பு, அமைதி ஆகியவற்றின் முக்கிமான அம்சமாக வர்த்தகம் விளங்குதால்.

“அத்துடன், உலகில் நடக்கும் பலவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்கா போன்ற பெரிய பொருளியல் நாடுகள் உலக நாடுகளுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அந்த நாடுகளுடன் ஒத்துழைக்கும் அதே நேரத்தில் பலன் பெறவும் வேண்டும் என விரும்புகிறோம், “ என்று திரு லீ விளக்கினார்.

அமெரிக்கா ஏற்று நடத்தும் ஏபெக் எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் லீ திங்கட்கிழமை அன்று சான் ஃபிரான்சிஸ்கோ சொன்றுள்ளார்.

சிங்கப்பூர் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் அந்த நிறுவனத்தின் 37வது வெளிநாட்டு அலுவலகமாகும். இது சிங்கப்பூர் நிறுவனங்கள் அமெரிக்க சந்தைக்குள் கால்பதிக்கும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

திரு லீ கிழக்கத்திய நாடுகளை நோக்கி தங்கள் பார்வையை செலுத்துமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். “சிங்கப்பூரில் அல்லது துடிப்புமிக்க ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் வர்த்தக வாய்ப்புகளை நாடும் அமெரிக்க நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்வது இதுதான்: வர்த்தகத்துக்காக சிங்கப்பூர் திறந்த நிலையில் உங்களை வரவேற்கிறது,” என்று திரு லீ சொன்னார்.

சிங்கப்பூர் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் சான் ஃபிரான்சிஸ்கோ அலுவலக திறப்பு விழாவுக்கு கலிஃபோர்னியா மாநில துணை நிலை ஆளுநர் எலனி குனோலாக்கிஸ், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் லுவி டக் இயூ, சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் ஜோனதன் கப்லான், அமெரிக்க வர்த்தக சபையின் ஆசியாவுக்கான மூத்த துணைத் தலைவர் சார்ல்ஸ் ஃபிரிமன் ஆகியோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்