குறுகிய காலத்துக்கு சட்டவிரோதமாக வீடுகளை வாடகைக்கு விட்டு ஆடவர் ஒருவர் பெரும் லாபம் சம்பாதிப்பது தெரியவந்துள்ளது. இதில் அவர் தமது முன்னாள் இல்லப் பணிப்பெண்கள் நால்வரை தமக்கு உதவும்படி செய்துள்ளார்.
டூ கிம் லின், வயது 53, என்ற சிங்கப்பூர் ஆடவருக்கு $1,428,000 அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அபராதத்தை கட்டத் தவறினால், அவர் 42 வார சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு ஒன்பது மாத சிறைவாசத்துக்கு ஈடானது.
திரு டூ மூன்று மாதங்களுக்கு குறைவான காலத்துக்கு வீடுகளை வாடகைக்கு விட்டதாக ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எதிரான மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
திரு டூ பல நிறுவனங்கள், வேறு பலர் ஆகியோரைப் பயன்படுத்தி பெரிய அளவிலான வாடகை வீட்டு தொழிலை நடத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டின.


