தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துருக்கியில் நிகழ்ந்த விபத்தில்சிங்கப்பூரர் மரணம்

2 mins read
d8fd5ade-5262-4899-b998-bb9e95273d42
ஜோசஃப் சியான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உயிரிழந்தார். - படம்: YWAM SINGAPORE/FACEBOOK

துருக்கியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 56 வயது சிங்கப்பூரர் உயிரிழந்தார்.

துருக்கியின் வடமேற்கு நகரான எடிர்னை நோக்கி வடக்கு மர்மரா நெடுஞ்சாலையில் டாக்சியில் பயணம் செய்துகொண்டிருந்த ஜோசஃப் சியான் விபத்தில் சிக்கியதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்தன.

உடனே அர்னாவுகோய் மாநில மருத்துவமனையில் திரு சியான் சேர்க்கப்பட்டார்.

ஆனால் பலனில்லாமல் அங்கேயே அவர் உயிரிழந்தார்.

விபத்தில் இரு ஓட்டுநர்கள் காயம் அடைந்ததாகவும் இது குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒய்டபிள்யூஏஎம் (YWAM) எனும் கிறிஸ்துவ சிங்கப்பூர் அமைப்புக்கு அவர் தேசிய அளவில் 12 ஆண்டுகள் இயக்குநராகச் செயல்பட்டுள்ளார்.

அவரது மறைவை இந்த அமைப்பும் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட தகவலில் உறுதி செய்துள்ளது.

மனைவி கிம், இரண்டு மகள் ஒலிவியா, ஆஷ்லி ஆகியோரை திரு சான் விட்டுச் சென்றுள்ளார் என்று ‘சால்ட்அண்ட்லைட்’ என்ற கிறிஸ்துவ அமைப்பு தெரிவித்தது.

ஆங்லிக்கன் தேவாலயத்தில் எட்டு ஆண்டுகளாக இளம் சமயப் போதராக இருந்த திரு சியான் 1997ல் ஒய்டபிள்யூஏஎம் அமைப்பில் சேர்ந்தார்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் அந்தப் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.

பின்னர், சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் உறுப்பினர்களைத் திரட்ட முற்படும் ‘Antioch 21’ திட்டத்தின் உத்திபூர்வ ஒருங்கிணைப்பாளராக ஆனார்.

இதற்கிடையே, சிங்கப்பூர் தேவாலயங்களின் ‘லவ்சிங்கப்பூர்’ கட்டமைப்பின் தலைவரும் சமயப் போதகருமான லாரன்ஸ் கோங், திரு சியானின் மறைவை ஏற்றுக்கொள்வது சிரமம் என்று கூறியுள்ளார்.

“அவர் ஒரு சகோதரர் மற்றும் தோழர், அவரது இதயம் அன்பால் நிறைந்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்