2030க்குள் அனைத்துப் பகுதியிலும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பான சாலைகள்

வரும் 2030ஆம் ஆண்டில் சிங்கப்பூர், சில அக்கம்பக்க வீதிகளை பாதுகாப்பானதாகவும், மூத்தோர் உட்பட பாதசாரிகளுக்கு பாதுகாப்பானதாகவும் ஆக்கும் திட்டம், சிங்கப்பூரின் அனைத்து 24 நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

அத்திட்டத்தில் நீண்ட நேர பச்சை மனிதன் சமிக்ஞைகள், குறைந்த வேகத்தில் ஓட்ட கட்டுப்பாடுகள், தடைகள் இல்லாத சாலைக் கடப்புகள் போன்றவை இடம்பெறுகின்றன.

அத்துடன், துடிப்பான முதுமையை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் அங் மோ கியோ, புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன், தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட முதிர்ச்சியடைந்த பகுதிகள் மேம்பாடு காணும்.

தடுப்புகள் இல்லாத சாய்வுப் பாதைகள், உடற்பயிற்சி இடங்கள், சிகிச்சைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகள் உள்ள 21,000க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த மேம்பாடுகளால் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, உடற்பயிற்சிக்கான இடங்கள், மூத்தோர் வெளியில் செல்லவும், சுறுசுறுப்பாக இருக்கவும், அவர்களின் சமூகத் தொடர்புகளை விரிவுபடுத்தவும் ஊக்குவிக்கும்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) செப்டம்பர் மாதம் அறிவித்த புதுப்பிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக குவீன்ஸ்டவுன் வட்டாரத்திலுள்ள மெய் லிங் பகுதியில் அத்தகைய உடற்பயிற்சி இடம் அமைக்கப்படுகிறது.

முன்னோடித் திட்டம் பயனுள்ளதாக இருந்தால் 2030க்குள் 30 இடங்களில் மூத்தோருக்கான உதவியுடன் கூடிய வீடுகளை அமைக்கவும் திட்டம் உள்ளது. புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்டவுன் ஆகிய வட்டாரங்களில் ஏற்கெனவே இரு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளன. மூன்றாவது முன்னோடித் திட்டம் வரும் டிசம்பரில் பிடோக்கில் தொடங்கப்படும்.

வீடமைப்பு, போக்குவரத்து, துடிப்பான முதுமை, பராமரிப்பு சேவைகள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய தேசிய திட்டமான ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல் திட்டத்தின்கீழ் (‘ஏஜ்வெல்எஸ்ஜி’) திட்டமிடப்பட்ட உள்ளமைப்பு மேம்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

சுகாதாரம், போக்குவரத்து, தேசிய வளர்ச்சி அமைச்சுகளால் செயல்படுத்தப்படும் இந்த 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அவர்கள் வீடுகளிலும் சமூகத்திலும் உதவ இலக்கு கொண்டுள்ளது.

நட்பார்ந்த வீதித் திட்டத்தை அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக் வெஸ்ட், தெம்பனிஸ், தோ பாயோ, வெஸ்ட் கோஸ்ட் ஆகிய ஐந்து இடங்களில் நிலப் போக்குவரத்து ஆணையம் சோதனை முயற்சியாக முதலில் செயல்படுத்தும்.

இப்பகுதிகளில் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் சாலைகளை, வாகனங்களுக்குப் பதிலாக பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மறுசீரமைக்கும் பணி 2023 இறுதியிலிருந்து கட்டுமானம் படிப்படியாகத் தொடங்கும். இதுவரை கிடைத்த நேர்மறையான கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக ஆணையம் குறிப்பிட்டது.

வீடுகளையும் குடியிருப்புப் பேட்டைகளையும் மேம்படுத்துவதன் மூலம் சிங்கப்பூர் விரைவாக மூப்படைந்து வரும் மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரியளவிலான, அதிக ஒருங்கிணைந்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சுகள் வியாழக்கிழமை கூறின.

இந்த முயற்சி குடியிருப்பாளர்களுடன் நெருக்கமான பங்காளித்துவத்தையும், அரசாங்க அமைப்புகளுக்கு இடையிலான அணுக்கமான ஒருங்கிணைப்பையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்தும்.

உதாரணமாக, மேம்பாடுகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளில் வசிக்கும் மூத்தோரிடம் கருத்துக் கேட்கப்படும். குடியிருப்பாளர்கள் தாங்கள் அடிக்கடி நடக்கும் பாதைகளில் அதிகாரிகளை அழைத்துச் செல்ல அழைக்கப்படுவார்கள். இதனால் அரசாங்க அமைப்புகள் இடைவெளிகளை அடையாளம் காண முடியும். மேலும் இந்தப் பகுதிகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை நன்கு புரிந்துகொள்ளலாம் என்று திரு லீ கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பேட்டைகளிலும் முதியோரை மையப்படுத்தும் மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

மூத்தோர் அடிக்கடி நடக்கும் பாதைகளில் அதிக தடை இல்லாத சாய்வுப் பாதைகள், ஓய்வெடுக்கும் வசதிகள் உள்ளிட்டவை மேம்பாட்டுப் பணிகளில் அடங்கும். ஞாபகமறதி பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் பெரிய, வண்ண அறிகுறிகளும் அறிமுகப்படுத்தப்படும்.

நல்லிணக்க கிராமம் @ புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்வே கனோபி முன்னோடித் திட்டங்களுக்குக் கிடைத்த ஆதரவின் அடிப்படையில் உதவியுடன் கூடிய வீடுகள் கட்டப்படுவதாக மூன்று அமைச்சுகளும் கூறின.

15 முதல் 35 ஆண்டுகள் வரையிலான குத்தகை காலத்தைக் கொண்ட இந்த வீடுகள், முதியோருக்கு ஏற்ற வசதிகளுடன் 24 மணி நேர அவசர உதவி போன்ற பராமரிப்புச் சேவைகளையும் பெற்றிருக்கும்.

ஏற்கெனவே உள்ள வீவக வீடுகளிலும் முதியோருக்கு ஏற்ற வசதிகள் அமைப்பது பற்றி ஆராயப்படுகிறது. இந்த மேம்பாட்டில் தீ எச்சரிக்கை சாதனங்கள் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!