$2.8 பி. சட்டவிரோத பண விவகாரம்; மீண்டும் பிணை மறுப்பு

1 mins read
e61e574a-860b-4623-b810-16497fe27c7f
படம்: - சிங்கப்பூர் காவல் படை

2.8 பில்லியன் டாலர் சட்டவிரோத பண விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வேங் போசென்னுக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

அவர் வியாழக்கிழமை இரண்டாவது முறையாக பிணை கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டார்.

மேலும் வேங்கின் உறவினர்கள் சிங்கப்பூருக்குள் நுழையவும் தங்கவும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த வேங் உட்பட 10 வெளிநாட்டு நபர்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சட்டவிரோத பண விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

சிறையில் இருக்கும் வேங்குக்கு உதவ அவரது தாய், சகோதரர் போன்ற உறவினர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

வேங் கைது செய்யப்படும் போது அவரது தாயார் சிங்கப்பூரில் சுற்றுலா விசாவில் இருந்தார். அவரது விசா காலம் முடிந்ததும் அதை புதுப்பிக்க விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் சீனா திரும்பிய அவர் மீண்டும் விசா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டது.

வேங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்ததாகவும் அவர் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

வேங் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 500,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்