மக்கள் கைகளில் மண்வெட்டியை ஏந்தியவாறு கரையோரப் பூந்தோட்டங்களில் தோட்டக்கலை நிபுணர்களாக மாறினர்.
கிட்டத்திட்ட 90 தொண்டூழியர்கள் வெளிப்புறச் செடிவகைகளைப் பராமரிக்கக் கற்றுக்கொண்டனர். இந்திய, சீன, மலாய், காலனித்துவ தோட்டங்களைக் கொண்டுள்ள 3.4 ஹெக்டர் மரபுடைமைத் தோட்டங்களிலும் செடிப் பராமரிப்பில் இவர்கள் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளது.
தோட்டக்கலை நிபுணர்களின் வழிகாட்டலில் ஆறுமாதப் பயிற்சியைப் பெறும் தொண்டூழியர்கள், மாதம் ஒரு முறை விதைகளை விதைத்தல், களை அகற்றுதல், மண்ணின் தரத்தைச் சோதித்தல் போன்ற அம்சங்கள் தொடர்பில் கற்றுக்கொள்வர்.
மருத்துவக் குணம் கொண்ட செடிகளில் பூச்சிகள் இருப்பதைக் கண்டறியவும் தொண்டூழியர்கள் அறிந்துகொள்வர்.
தோட்டக்கலை நிபுணர்களாக மாறிய குடிமக்களுடன் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா இந்திய தோட்டத்தில் செடி நட வருகை தந்திருந்தார்.
தொண்டூழியத் திட்டத்தின் அடுத்த ஆள் சேர்க்கைப் பயிற்சி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும்.

