குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கான எட்டு ஆண்டுகால நிபுணத்துவ மதியுரைத் திட்டத்தை உள்ளூர் சமுதாயப் பணி அமைப்பு ஒன்று தொடங்கியுள்ளது.
வறுமையிலிருந்து வெளியேறி தங்கள் ஆற்றலைச் சிறார்கள் வெளிக்கொணர உதவும் திட்டமாக இது அமைகிறது.
‘ஷைன் சில்ரன் அண்ட் யூத் சர்வீசஸ்’ அமைப்பு வழங்கும் ‘ஸ்டார்’ திட்டத்தின்கீழ், ஒவ்வொரு சிறுவரும் முழுநேர நிபுணத்துவ மதியுரைஞர் நியமிக்கப்படுவார்.
கல்வி ஆதரவு, மதியுரைக்காக அவர்கள் வாரந்தோறும் சந்திப்பர். சிறார்கள் தொடக்கப்பள்ளிக்கும் உயர்நிலைப்பள்ளிக்கும் நுழைவது உட்பட வளரும் பருவத்தில் அவர்களுக்கு மதியுரைஞர்கள் ஆதரவாக இருப்பர்.
சம்பளம் வழங்கப்படும் அவர்களுக்கு சமுதாயப் பணி அல்லது ஆரம்பகால பாலர்பருவக் கல்வியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிறார்களுடனும் அவர்களின் குடும்பத்தாருடனும் ஆக்ககரமான முறையில் உரையாட முடியும்.

