தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

265 ஊழியர்கள் ஆட்குறைப்பு; மூடப்படவுள்ள சிங்கப்பூர் கிளை

1 mins read
f7aedc7e-7f4e-4efe-a2af-05d8c12e227d
பிரபல ‘பொக்கிமோன் கோ’ கைப்பேசி விளையாட்டைத் தயாரித்துள்ளது ‘யுனிட்டி சாஃப்ட்வேர்’. - படம்: நியன்டிக்

சான் பிரான்சிஸ்கோ: பிரபல ‘பொக்கிமோன் கோ’ விளையாட்டை உருவாக்கிய வீடியோ விளையாட்டு மென்பொருள் நிறுவனமான ‘யூனிட்டி சாஃப்ட்வேர்’, செய்யவுள்ள ஆட்குறைப்பில் 265 ஊழியர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.

நிறுவனத்தின் அனைத்துலக ஊழியரணியில் ஆட்குறைப்புக்கு ஆளாகவுள்ள ஊழியர்கள் விகிதம் 3.8% என்று கூறப்படுகிறது.

மேலும், யுனிட்டி 14 இடங்களில் உள்ள அதன் அலுவலகங்களை மூடவுள்ளது.

சிங்கப்பூர், பெர்லின் ஆகிய இடங்களும் இதில் அடங்கும்.

வாரத்தில் மூன்று நாள்களுக்கு அலுவலகத்திலிருந்தபடி வேலை பார்க்க வேண்டும் என்ற நடைமுறையையும் யுனிட்டி தகர்த்தவுள்ளது.

நிறுவனத்தின் வர்த்தகச் செயல்பாடுகளை மறுவடிவமைப்பதற்காக மேலும் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக யூனிட்டியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்