உற்பத்தித்துறையில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்க கணக்காளர்களுக்குப் புதிய சான்றிதழ்கள்

உற்பத்தித்துறையில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்க கணக்காளர்களுக்குப் புதிய சான்றிதழ்கள்

1 mins read
b0acc7d1-7651-43ba-9b27-e3cbc34c0d69
நீடித்த நிலைத்தன்மை தொடர்பாக நிறுவனங்களுக்கு உதவ கணக்காளர்களுக்குத் தகுந்த திறன்கள் இருப்பதைப் புதிய திட்டம் உறுதி செய்யும். - படம்: தமிழ் முரசு
Google News Preferred Icon

உற்பத்தித்துறையில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்க கணக்காளர்களுக்குப் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

நீடித்த நிலைத்தன்மை தொடர்பாக நிறுவனங்களுக்கு உதவ கணக்காளர்களுக்குத் தகுந்த திறன்கள் இருப்பதை இது உறுதி செய்யும்.

நவம்பர் 29ஆம் தேதியன்று மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற மாநாட்டில் சிங்கப்பூர் பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவித்த திட்டங்களில் இது அடங்கும்.

உலகளாவிய போக்கிற்கு ஏற்ப கணக்காளர் பணிகளை மேற்கொள்வது முக்கியம் என்று இரண்டாம் நிதி அமைச்சர் இந்திராணி ராஜா மாநாட்டில் தெரிவித்தார்.

“பசுமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அதுதொடர்பான பணிகளை மேற்கொள்ளத் தகுந்த ஆற்றலைக் கொண்ட கணக்காளர்களுக்கான தேவை அதிகரிக்கிறது,” என்று அமைச்சர் இந்திராணி தெரிவித்தார்.

மாநாட்டின்போது நிபுணத்துவக் கணக்காளர் நடுவம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 13 உள்ளூர், உலகளாவிய பங்காளித்துவ நிறுவனங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்