தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக கடற்துறை அமைப்பின் மன்றத்தில் சிங்கப்பூர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது

1 mins read
d9a6cd8d-08a1-4e7a-944e-c0795e503916
அனைத்துலகக் கடற்துறை அமைப்பின் மன்றத்தில் நியமிக்கப்பட்டிருப்பது சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள கௌரவம் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் தெரிவித்தார். - படம்: தமிழ் முரசு

அனைத்துலகக் கடற்துறை அமைப்பின் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. அதில் அமைப்பின் மன்றத்தில் டிசம்பர் 1ஆம் தேதியன்று சிங்கப்பூர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது.இந்த மன்றத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து 16வது முறையாக இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பின் 33வது கூட்டத்தில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போக்குவரத்து அமைச்சு, கடற்துறை, துறைமுக ஆணைய அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட பேராளர் குழு கலந்துகொண்டது.

இக்குழுவுக்கு போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தலைமை தாங்கினார்.

மன்றத்தில் மீண்டும் நியமிக்கப்பட்டது சிங்கப்பூருக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் என்று தெரிவித்த தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட், ஆதரவு வழங்கிய சக உறுப்பிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“கடற்துறைக்கான பாதுகாப்பு, சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆகியவற்றை பார்த்துக்கொள்வதில் அனைத்துலகக் கடற்துறை அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அமைப்பில் இலக்கை அடைய சிங்கப்பூர் தொடர்ந்து துடிப்புடன் பங்களிக்கும்,” என்று அமைச்சர் சீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்