தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டதால் ஐந்தறை வீவக வீடு இழப்பு

1 mins read
9a3dc0cc-9caf-4f32-98d8-581c94f9804b
விதிமுறைகளை மீறியதாகப் பல வீட்டு உரிமையாளர்கள் பிடிபட்டுள்ளனர். - கோப்புப் ட்ம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சொத்து முதலீட்டாளர் ஒருவர் ஐந்தறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டை வாங்கி அதை சட்டவிரோதமாக வாடகைக்கு விடும் முயற்சியில் இறங்கினார்.

அதற்கு வகைசெய்ய விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாத சொத்துச் சந்தை முகவர் ஒருவரின் சேவையையும் அவர் நாடியிருக்கிறார்.

வீவக வீட்டு உரிமையாளர்கள் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்துக்கு (மினிமம் ஆக்கியுப்பே‌ஷன் பீரியட்) தங்கள் வீட்டில் வசித்த பிறகே அதை வாடகைக்கு விடவோ விற்கவோ முடியும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் அத்தகைய விதிமுறைகளை மீறினார்.

அதற்காக அவரின் சொத்துச் சந்தை முகவர் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

ஒரே மாதத்தில் உண்மை வெளிவந்தது. இதனால் அந்த உரிமையாளர் தனது வீவக வீட்டை இழக்க நேரிட்டது. அதில் வாடகைக்கு இருந்த குடும்பம் குறுகிய காலத்தில் வெளியேற வேண்டியிருந்தது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அந்த வீட்டை எடுத்துக்கொண்டது.

சம்பந்தப்பட்ட சொத்து முகவர் நான்கு மாதங்களுக்குத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அபாரதமாகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காகவும் அவர் 7,000 வெள்ளி செலுத்த வேண்டியிருந்தது.

இதுபோல் விதிமுறைகளை மீறும் பல வீட்டு உரிமையாளர்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்