கேலாங் ஈஸ்ட் வீட்டில் தீ; உரிமையாளர் வெளிநாட்டில் இருந்ததாகத் தகவல்

கேலாங் ஈஸ்ட் வீட்டில் தீ; உரிமையாளர் வெளிநாட்டில் இருந்ததாகத் தகவல்

1 mins read
4f367754-1b2c-4ff2-b94c-8592c4e2f199
சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது. - படம்: ‌ஷின் மின் வாசகர்

கேலாங் ஈஸ்ட் சென்ட்ரலில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டில் சனிக்கிழமையன்று தீ மூண்டது.

இச்சம்பவம் கேலாங் ஈஸ்ட் சென்ட்ரலில் இருக்கும் வீவக புளோக் 123ல் நிகழ்ந்தது. தீ மூண்டதைத் தொடர்ந்து அந்த புளோக்கில் உள்ள பல வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

சம்பவம் குறித்து சனிக்கிழமை காலை ஏழு மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

தீ மூண்டபோது அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்