தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்கலைக்கழகங்களும் மறுதிறன் பயிற்சிகளும் ‘ஏஐ’ ஊழியரணியின் விரிவாக்கத்திற்குக் கைகொடுக்கின்றன: வல்லுநர்கள்

1 mins read
ecc889cb-6790-454d-9eb8-8dd8a4d2f9bd
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள ஊழியரணியில் இடம்பெறும் பெரும்பாலானோர் உள்ளூரில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பர் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 15,000க்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பல்கலைக்கழகங்களில் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் தொடர்பான பாடத்திட்டங்கள் அதிகரிப்பதும் மறுதிறன் பயிற்சித் திட்டங்களும் இந்த இலக்கை விரைவில் எட்டுவதற்குக் கைகொடுப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள ஊழியரணியின் புதிய ஊழியர்கள், பெரும்பாலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே பயிற்சி பெறுவர் என்று கருதப்படுகிறது.

‘மெட்டாவெர்ஸ் டெக்னாலஜிஸ்’ போன்ற இதர துறைகளைச் சார்ந்தோர் மறுதிறன் பயிற்சிக்குப் பிறகு அந்த ஊழியரணியில் பங்களிக்க இயலும்.

டிசம்பர் 4ஆம் தேதி, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் புதிய செயற்கை நுண்ணறிவு உத்தியை அறிவித்தார்.

அதன்கீழ், இங்குள்ள செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்கத் திட்டமிடப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்