சிங்கப்பூர்க் கப்பலால் போக்குவரத்து தடைபடவில்லை: சூயஸ் கால்வாய் ஆணையம்

சிங்கப்பூர்க் கப்பலால் போக்குவரத்து தடைபடவில்லை: சூயஸ் கால்வாய் ஆணையம்

1 mins read
555e9754-5f23-46c1-8788-20784167e164
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒன் ஓர்ஃபியஸ் கப்பலின் சுக்கானில் கோளாறு ஏற்பட்டதால் இழுவைப் படகுகள் உதவி செய்ததாகக் கூறப்பட்டது. - படம்: சூயஸ் கால்வாய் ஆணையம்/எக்ஸ் தளம்

கெய்ரோ: சூயஸ் கால்வாயின் கிழக்குத் தடத்தில் உள்ள மிதக்கும் பாலத்தில், புதன்கிழமை, கொள்கலன் கப்பல் ஒன்று மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவத்தால் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏதுமில்லை என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒன் ஓர்ஃபியஸ் கப்பல் அந்தக் கால்வாயைக் கடக்க முயன்றபோது அதில் கோளாறு ஏற்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து நெதர்லாந்திற்குச் சென்றுகொண்டிருந்த அக்கப்பலின் சுக்கானில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பின்னர் இழுவைப் படகுகள் அதற்கு உதவி செய்தன.

சுக்கான் பழுதுபார்க்கப்பட்ட பிறகு, ஒன் ஓர்ஃபியஸ் கப்பலும் அதற்குப் பின்னால் வந்த ஆறு கப்பல்களும் பயணத்தைத் தொடர்ந்ததாக சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்