தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசாவுக்கு $2.25மி. அபராதம்

1 mins read
8d1aea5e-c262-48cb-a432-e4ae597b9408
ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசா, மூன்றாம் தரப்பினரிடமிருந்து $5,000க்கு அதிகமான ரொக்கத்தைப் பெற்றபோது, உரிய சோதனைகளை செய்யத் தவறியதாகக் கூறப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம், ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசாவிற்கு $2.25 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் செலுத்துவதற்காக, மூன்றாம் தரப்பினரிடமிருந்து $5,000க்கு அதிகமான ரொக்கத்தைப் பெறும்போது, உரிய சோதனைகளை செய்யத் தவறியதன் தொடர்பில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சூதாட்டக்கூடம் நடத்துவோர் அத்தகைய சோதனைகளைச் செய்யவேண்டியது கட்டாயம் என்பதை ஆணையம் சுட்டியது.

2016ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையே ரிசார்ட்ஸ் வேர்ல்டு செந்தோசா ஊழியர்கள் அந்தச் சோதனைகளை செய்யத் தவறியது தெரியவந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்