சட்டவிரோத சூதாட்டம்; 21 சந்தேக நபர்கள் சிக்கினர்

சட்டவிரோத சூதாட்டம்; 21 சந்தேக நபர்கள் சிக்கினர்

படம்: சிங்கப்பூர் காவல் படை

11 Dec 2023 - 10:16 pm

1 mins read

சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 21 சந்தேக நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக லோரோங் 30 கேலாங்கில் நடந்த சோதானையில் 40,200 வெள்ளி ரொக்கம், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று டிசம்பர் 11ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.

விசாரணையின் கீழ் வைக்கப்பட்டவர்களில் பத்துப் பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள். அவர்களுடைய வயது 25 முதல் 77 வரை என்று அறிக்கை கூறியது.

இதற்கிடையே அனைத்துவிதமான சட்டவிரோத சூதாட்டங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்