3,700க்கு மேற்பட்ட பெட்டிகள் கள்ள சிகரெட் பறிமுதல்

சிங்கப்பூர் சுங்கத் துறை, டிசம்பர் 6, 7ஆம் தேதிகளில் நடத்திய சோதனைகளில் 3,749 பெட்டிகளில் இருந்த தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

துவாஸ் லிங்க் 3, மரின் பரேட் சென்ட்ரல் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சுங்கத்துறை டிசம்பர் 12ஆம் தேதி தெரிவித்தது.

துவாசில் லாரி ஒன்றில் 1,509 பெட்டிகள் சிகரெட்டுகளுடன் மேலும் 3,628 பாக்கெட்டுகள் கள்ள சிகரெட்டுகள் பிடிபட்டன. சீன நாட்டவரான 31 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மரின் பரேட்டில் வேன் ஒன்றில் 2,240 பெட்டிகள் கள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்பில் வேன் ஓட்டுநரான 32 வயது சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

லாரி, வேன் இரண்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் மூலம் $440,127 பொருள், சேவை வரி ஏய்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், கள்ள சிகரெட்டுகளை வாங்குதல், விற்பனை செய்தல், வைத்திருத்தல், விநியோகம் செய்தல் ஆகியவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏய்க்கப்பட்ட வரித் தொகையைப் போன்று அதிகபட்சம் 40 விழுக்காட்டுத் தொகை அபராதமோ ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!