அமைச்சர் ஓங்: சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை

ஜூன் மாதத்திற்குள் புதிய நடைமுறைகள்

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தவிர்க்கும் புதிய, தரப்படுத்தப்பட்ட கட்டமைப்பு ஒன்று அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் என அனைத்துப் பொது சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களிலும் கட்டமைப்பு அமல்படுத்தப்படும்.

புதிய கட்டமைப்பு குறித்து டிசம்பர் 13ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

துன்புறுத்தல் என்றால் என்ன, துன்புறுத்தலுக்கு ஆளாக்குவோர் எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை போன்றவற்றை இந்தப் புதிய கட்டமைப்பு வரையறுத்துக் காட்டும்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைத் துன்புறுத்துதல் தொடர்பாக அமைக்கப்பட்ட முத்தரப்புப் பணிக்குழு அதன் ஆய்வு முடிவுகளை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் வெளியிட்டது.

இந்த ஆய்வில் 3,000க்கும் அதிகமான சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் பொதுமக்களில் 1,500 பேரும் பங்கேற்றனர்.

ஆய்வுக்கு முன்பான ஓராண்டு காலத்தில் தாங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மூன்றில் இரு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

அவர்களில் நான்கில் மூவர் சம்பவம் குறித்து புகார் அளிக்காமல் மௌனம் காத்துவிட்டதாகவும் அறியப்படுகிறது.

ஆண்டுகணக்காக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பெரும் வேலைப் பளுவைத் தாங்கி வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங் குறிப்பிட்டார்.

இந்தப் பளு கொள்ளைநோயின்போதும் தற்போது டிசம்பரில் நிலவிவரும் கொவிட்-19 சம்பவங்களுக்கிடையேயும் தொடர்வதாக அவர் சுட்டினார்.

அதனால், அவர்களுக்கு முடிந்த ஆதரவை வழங்க வேண்டும் என்று திரு ஓங் கேட்டுக்கொண்டார்.

கட்டமைப்பின்கீழ் தகாத, மிரட்டலான, அவமதிப்பதாக இருக்கும் சொற்கள், செயல்கள், நடத்தைகள் ஆகியவை துன்புறுத்தல் எனப் பொருள்படும். இதனால் அந்தச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் மிரட்டலுக்கு ஆளானதாக உணரலாம் அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

தங்களின் பொறுப்பை ஆற்றவும் இந்தத் துன்புறுத்தல் தடையாக இருக்கலாம்.

‘இதுவும் கடந்து போகும்’

இதற்கிடையே, கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ளதன் தொடர்பில் பேசிய அமைச்சர் ஓங் யி காங், இதுவும் கடந்து போகும் என்றார்.

மக்களிடையே பதற்றம் தெரிந்தாலும் அதிலும் நன்மை உண்டு என்றார்.

இந்தப் பதற்றத்தால் மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று அவர் சுட்டினார்.

மக்கள் மிக அண்மைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாவிட்டால் அடுத்த கொவிட்-19 அலையால் கூடுதல் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!