தொடர்ந்து 18 ஆண்டுக்கு மேலாக 51 பெண்களை ஆபாசமாக படம் எடுத்த கட்டுமானத் துறையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் லீ லீயன் ஷானுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த 49 வயது ஆடவர் 10 குற்றச்சாட்டுகளுக்கு வியாழக்கிழமை தண்டனை பெற்றார். இவற்றைப்போல, மேலும் 42 குற்றச்சாட்டுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் அவருடைய வேலையிடத்தில் ஊழியர்களாக இருந்தார்கள். அவர்களை 2017 முதல் 2018 வரை லீ படம் எடுத்தார். மற்றவர்களை 2002 முதல் 2020 வரை படம் எடுத்தார்.
இந்த படங்களை, ‘சக ஊழியர்கள்’ என்ற தலைப்பிலும் ‘சிங்கப்பூர் அலுவலகப் பெண்’ என்றும் பிரித்து வைத்தார்.
இப்படங்களை சமூக வலைத்தளம் மூலம் தம்மைப் போன்று குற்றம் செய்பவர்களிடம் வர்த்தகம் செய்ய லீ முயற்சி செய்தார். அனால் அதிகாரிகளிடம் பிடிபட்டு விடுவோம் என அஞ்சி இவர் அவ்வாறு செய்யவில்லை.
பாதிக்கப்பட்ட பெண், மரினா பே லிங்க் வளாகத்தில் மின்படிக்கட்டில் பயணம் நின்றுகொண்டு இருந்தபோது, தமது கால்களை லீ உரசும் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இதை அறிந்த அப்பெண் உதவிக்குக் கத்தினார்.
வழிப்போக்கர்கள், பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிபட்ட லீ, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களைக் குறிவைத்ததால், லீக்கு திட்டமிடல்கள் இருந்ததாக அரசு வழக்கறிஞர் ஜெரமி பின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

