உணவுப்பொருள்களை சேதப்படுத்திய வேலையில்லா ஆடவருக்கு சிறை

உணவுப்பொருள்களை சேதப்படுத்திய வேலையில்லா ஆடவருக்கு சிறை

1 mins read
00e553d9-90ee-4bfa-b5cb-7ffda8795691
1994 முதல் பல குற்றங்களில் தண்டிக்கப்பட்ட இங், வேலை கிடைக்காத கோபத்தில் குற்றத்தைச் செய்ததாக அவரது வழங்கறிஞர் கூறினார். - படம்:என்டியுசி ஃபேர்பிரைஸ்

வேலை கிடைக்காத விரக்தியில் பேரங்காடிகளில் சுமார் 500 பொருள்களை கிழித்துத் திறந்தார் இங் கெங் சூன் என்ற 51 வயதான சிங்கப்பூரர். அவரது குற்றத்துக்கு 22 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைகளால் திண்பண்டங்களையும் , ஒரு சிறிய கத்தியைக் கொண்டு அரிசி பொட்டலங்களையும் அவர் கிழித்துள்ளார். அதனால் அப்பொருள்கள் பேரங்காடிகளில் விற்பனை செய்யமுடியாமல் போனது.

கடந்த 2021ல் இதுபோன்ற திருட்டுக் குற்றத்துக்காக அவர் 34 மாத சிறைத்தண்டனையை அனுபவித்தார். அதன்பிறகு 2022 செப்டம்பரில் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலையானபோது, மறுபடியும் குற்றம் புரியாமல் இருக்க அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனையும் மீறி அவர் பல தொடர் குற்றங்களைப் புரிந்துள்ளார். அவர் செய்த 8 திருட்டுக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

மொத்தம், 294 திண்பண்டங்களையும், 202 அரிசிப் பொட்டலங்களையும் சேதப்படுத்தி $5,800 இழப்புக்கு இங் காரணமானார். நெக்ஸ் மற்றும் ஜூரோங் பாயின்ட் பேரங்காடிகளில் ஆக அதிக பாதிப்பை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்