உந்து நடமாட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு வரவேற்பு

உந்து நடமாட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு வரவேற்பு

2 mins read
53cdebc8-7d38-4f05-ae4c-8cd8f8767d54
பரிந்துரைகளில், நடமாட்ட உதவிச் சாதனங்களில் வேகவரம்பை மணிக்கு பத்து கிலோமீட்டர் என்பதில் இருந்து ஆறு கிலோமீட்டருக்கு, அதாவது நடக்கும் வேகத்திற்குக் குறைக்க வேண்டும் என்பதும் அடங்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நடக்கச் சிரமப்படுபவர் என்று சான்றளிக்கப்படுபவர் அல்லது மருத்துவத் தேவைகள் உடையோர் மட்டுமே தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு, போக்குவரத்து அமைச்சிடம் வியாழக்கிழமை பரிந்துரை செய்தது.

அந்தப் பரிந்துரையை தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களை பயன்படுத்துவோர் வரவேற்றுள்ளனர். புதிய பரிந்துரை மூலம் நடமாட்ட உதவிச் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதைக் குறைக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

போலியோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள 54 வயது திருவாட்டி டான் லி லி, தான் 34 ஆண்டுகளாக தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களை பயன்படுத்தி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

நல்ல உடல்நலத்துடன் உள்ள பலர் நடமாட்ட உதவிச் சாதனங்களை பயன்படுத்துகின்றனர், வேகமாக செல்கின்றனர் அதனால் பலமுறை அவர்களுக்கு தான் வழிவிட நேர்வதாக லி லி குறிப்பிட்டார்.

மேலும் ரயில் நிலையங்கள், பொது இடங்களில் அச்சாதனங்களை அச்சுறுத்தும் விதமாக பயன்படுத்தி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கின்றனர். அதனால் புதிய பரிந்துரைக்குத் தான் ஆதரவு தருவதாக லி லி கூறினார்.

ஓராண்டுக்கு மேலாக தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தை பயன்படுத்தும் 61 வயது ஆடம் ஹெங்கும் திருவாட்டி லி லி போல் புதிய பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

“நடமாட்ட உதவிச் சாதனங்களை குடும்ப வாகனமாக சிலர் பயன்படுத்துகின்றனர். தங்கள் குழந்தைகளிடம் அந்த சாதனத்தை தருகின்றனர். மேலும் சிலர் அந்த சாதனத்தை உணவு விநியோகிக்கும் வாகனமாகவும் பயன்படுத்துகின்றனர். இது மற்றவர்களுக்கு ஆபத்தாக மாறக்கூடும்,” என்றார் திரு ஆடம்.

பரிந்துரைகளில், நடமாட்ட உதவிச் சாதனங்களின் வேகவரம்பை மணிக்குப் பத்து கிலோமீட்டர் என்பதில் இருந்து ஆறு கிலோமீட்டருக்கு, அதாவது நடக்கும் வேகத்திற்குக் குறைக்க வேண்டும் என்பதும் அடங்கும்.

நடமாட்ட உதவிச் சாதனங்கள், வாகனங்களைப்போல் பெரிதாக உள்ளன. அதனால் மணிக்குப் பத்து கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அப்பாதையில் வரும் மற்றவர்களுக்கு அது ஆபத்தாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தப் பரிந்துரைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

“மணிக்கு 6 கிலோமீட்டர் வேகம் என்பது மிகவும் மெதுவான ஒன்று. எனது 5 வயதுப் பேரன்கூட இதைவிட வேகமாக நடப்பார். அதனால் வேகவரம்பில் சற்று தளர்வுகள் தரலாம்,” என்கிறார் 60 வயது ஜேன் இயோ.

பொதுமக்களும் புதிய பரிந்துரைக்கு ஆதரவு தந்துள்ளனர்.

இப்பரிந்துரையால் யாருக்கு நடமாட்ட உதவிச் சாதனம் தேவைப்படுகிறது என்பது எளிதாகத் தெரியும். அவர்களுக்கு பொதுப்போக்குவரத்து போன்ற இடங்களில் உதவிகளை வழங்க முடியும். இதனால் சாதனத்தை யாரும் தவறாகப் பயன்படுத்தமுடியாது,” என்றார் 20 வயது கென்னத் இங்.

குறிப்புச் சொற்கள்