பருவநிலை மாநாட்டில் சிங்கப்பூரின் ‘முப்பரிமாண மரங்கள்’

1 mins read
9cb44701-0f47-47b9-81d0-8269705cbc53
துபாயில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டை அலங்கரித்த ‘முப்பரிமான மரங்கள்’ - படம்: பிக்கோ குழுமம்

அண்மையில் துபாயில் நடைபெற்ற ஐநாவின் பருவநிலை மாநாட்டில் சிங்கப்பூர் கூடாரத்தை அலங்கரித்த ‘முப்பரிமாண மரங்கள்’ அனைவரையும் கவர்ந்தது.

 அந்த இரு மரங்களையும் முப்பரிமான அச்சு முறையில் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை மற்று நீடித்த நிலைத்தன்மை வடிவமைப்புப் பிரிவைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் கார்லோஸ் பெனோன் வடிவமைத்தார்.

அவை துருப்பிடிக்காத எஃகு, மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிக் கழிவுகள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை.

இயற்கையுடன் சிங்கப்பூருக்கு இருக்கும் தொடர்பையும் சிங்கப்பூர் மேற்கொண்டு வரும் நீடித்த நிலைத்தன்மை முயற்சிகளையும் இந்த வடிவமைப்பு பறைசாற்றுவதாகப் பேராசிரியர் பெனோன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்