வடகொரியாவுக்கு எண்ணெய் எரிவாயு ஏற்றுமதி: சிங்கப்பூரர்கள்மீது குற்றச்சாட்டு

வடகொரியாவுக்கு எண்ணெய் எரிவாயு ஏற்றுமதி: சிங்கப்பூரர்கள்மீது குற்றச்சாட்டு

1 mins read
badd863c-046b-48c6-9ffe-763822682e84
சந்தேக நபர்களான குவெக் கீ செங் (இடது), ஜஸ்டின் லோ எங் இயோவ். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடகொரியாவுக்கு எண்ணெய் எரிவாயுவை (கேஸ் ஆய்ல்) ஏற்றுமதி செய்யப்பட்டதன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இரு சிங்கப்பூரர்கள் மீது வியாழக்கிழமையன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

64 வயது குவெக் கீ செங் 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஐக்கிய நாட்டுச் சபை வடகொரியாவுக்கு எதிராக விதித்துள்ள தடை உத்தரவுகளை மீறி அந்நாட்டுக்கு ஏற்றுமதிக்கென வகைப்படுத்தப்பட்ட பொருளை அனுப்பியதன் தொடர்பிலான ஏழு குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

குவெக், நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அன்ஃபசார் டிரேடிங், ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சுவான்சீஸ் போர்ட் செர்விசஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குநராவார்.

மற்றொரு சந்தேக நபரான 54 வயது ஜஸ்டின் லோ எங் இயாவ், இதன் தொடர்பில் வடகொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாட்டுச் சபையின் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நநோக்குகிறார்.

ஐஎஸ்ஏ எனர்ஜி நிறுவனத்தின் வங்கிக் கணக்கின் முலம் எண்ணெய் எரிவாயுவை வாங்கியதாக நம்பப்படுகிறது. வடகொரியாவுக்கு எண்ணெய் எரிவாயுவை அனுப்ப ஒன்பது பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

லோ, ஐஎஸ்ஏ எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநராவார். அந்நிறுவனமும் இந்த விவகாரத்தின் தொடர்பில் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறது.

குறிப்புச் சொற்கள்