தொழில்துறை, சாலை இணைப்புக்கு நில மீட்புப் பணியில் இறங்கும் ஜேடிசி

தொழில்துறை, சாலை இணைப்புக்கு நில மீட்புப் பணியில் இறங்கும் ஜேடிசி

1 mins read
9cb2c1e5-95a9-4cc0-aaf6-cd84c70b5ac8
துவாஸ் வட்டாரத்தில் நில மீட்புப் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழில்துறைக்காகவும் துவாஸ் துறைமுகத்துடனான சாலை இணைப்புகளை மேம்படுத்தவும் துவாஸ் வட்டாரத்தில் நில மீட்புப் பணிகளுக்கு ஜேடிசி திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக ஏறத்தாழ 172 ஹெக்டர் பரப்பளவு நிலம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்படும்.

நில மீட்புப் பணிகள் 2025ஆம் ஆண்டில் தொடங்கி 2029ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஜேடிசி கார்ப்பரேஷன் கூறியது.

ஜூரோங், துவாஸ் தொழில்துறை வட்டாரங்களின் பழைய பகுதிகளைப் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும். அதன் ஒரு பகுதியாக எதிர்காலத் தொழில்துறை தேவைகளுக்காக இந்த நில மீட்புப் பணிகள் நடத்தப்படும் என்றும் ஜேடிசி தெரிவித்தது.

துவாஸ் சவுத் வட்டாரம், துவாஸ் துறைமுகத்துடனான உள்கட்டமைப்பு, சாலை இணைப்புகளுக்கு புதிதாக உருவாக்கப்படும் நிலம் அவசியம் என்று அது கூறியது.

இந்த உள்கட்டமைப்பு, சாலை இணைப்புகள் ஆகியவற்றுக்கான பணிகள் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்படும். இப்பணிகள் 2040களில் முழுமையாக நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்