தொடர்ந்து நான்கு மாதங்களாக கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் விலைகள் 0.4 விழுக்காடு ஏற்றம் கண்டதாக எஸ்ஆர்எக்ஸ், 99.co சொத்துத் தளங்கள் தெரிவித்தன.
ஆண்டு அடிப்படையில் இவை 7.4 விழுக்காடு அதிகம்.
இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் 847 கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன. கடந்த மாதம் 848 கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன.
ஆண்டு அடிப்படையில் இது 6.3 விழுக்காடு அதிகம்.
இருப்பினும், கடந்த ஐந்து நவம்பர் மாதங்களில் இது 4.1 விழுக்காடு குறைவு.
கடந்த மாதம் மூன்று புதிய கூட்டுரிமை வீடு திட்டங்கள் விற்பனை விடப்பட்டது கூட்டுரிமை வீடுகளின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஹட்டன்ஸ் ஏஷியாவின் தலைமை நிர்வாகி மார்க் யிப் தெரிவித்தார்.
“அந்தப் புதிய கூட்டுரிமை வீடுகளை வாங்க முடியாதவர்கள் மறுவிற்பனை வீடுகளை வாங்கினர். இதனால் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை கொஞ்சம் அதிகரித்தது,” என்று அவர் தெரிவித்தார்.

