சிங்கப்பூருக்கு 3 பி. டன் எடையுள்ள கப்பல்கள் வருகை

வரலாறு காணாத அளவில் இவ்வாண்டு சிங்கப்பூர் துறைமுகத்துக்கு இதுவரை மொத்தம் மூன்று பில்லியன் டன் எடையுள்ள கப்பல்கள் வருகை தந்துள்ளன.

ஒரு கப்பலின் எடையைக் கணக்கிடும்போது அதிலுள்ள இயந்திர அறை (எஞ்சின் ரூம்), சரக்குகள் வைக்கப்படாத பகுதிகள் ஆகியவையும் கருத்தில்கொள்ளப்படும். இதைக் கொண்டே பொதுவாக ஒரு துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து கணிக்கப்படும்.

திங்கட்கிழமையன்று (25 டிசம்பர்) சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ‘ஒன் ஒலிம்பஸ்’ கப்பல் பாசிர் பாஞ்சாங் கப்பல் முனையத்தில் வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து புதிய சாதனை படைக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டில் மொத்தம் ஒரு பில்லியன் டன் எடையுள்ள கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்துக்கு வந்தன. 2011ல் அந்த எண்ணிக்கை இரண்டு பில்லியனாகப் பதிவானது.

கொந்தளிப்பாக இருந்துவந்துள்ள கடற்பகுதியை சிங்கப்பூரின் கடல்துறை கடந்த சில ஆண்டுகளாகக் கையாள வேண்டியிருந்தது; அதைக் கருத்தில்கொள்ளும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றார் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட். சாதனையை நினைவுகூர்ந்த அவர் வண்ணம் செவ்வாய்க்கிழமைன்று பாசிர் பாஞ்சாங்கில் உள்ள சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் (பிஎஸ்ஏ) அலுவலகத்துக்குச் சென்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

‘ஒன் ஒலிம்பஸ்’, ஓ‌ஷன் நெட்வொர்க் கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமானது. தங்கள் கப்பல்கள் ஒன்றின் மூலம் சிங்கப்பூர் புதிய சாதனை படைக்க முடிந்ததை எண்ணி ஓ‌‌ஷன் நெட்வொர்க் பெறுமையடைவதாக அதன் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி ஜெரிமி நிக்சன் சொன்னார்.

இதை ஒரு முக்கிய சாதனை என பிஎஸ்ஏ இன்டர்நே‌ஷனல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஓங் கிம் போங் குறிப்பிட்டார். பிஎஸ்ஏ, சிங்கப்பூரைத் தொடர்ந்து முக்கிய துறைமுக மையமாக நிலைநாட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் கடல்துறையின் நம்பகத்தன்மையையும் மீள்திறனையும் இந்த சாதனை எடுத்துக்காட்டுவதாக ஜூரோங் போர்ட் தலைமை நிர்வாக அதிகாரி டெரன்ஸ் சியாவ் சுட்டினார்.

அரசாங்கம், கடல்துறை, ஊழியரணிகள் ஆகியவற்றுக்கு இடையிலான வலுவான பங்காளித்துவமே சிங்கப்பூர் துறைமுகத்தின் வெற்றிக்கு ஆக முக்கியமான காரணம் என்று அமைச்சர் சீ கூறினார்.

“உள்கட்டமைப்பையும் நாம் வடிவமைக்கப் பயன்படுத்தும் பாகங்களையும் கவனித்து பிறரும் அவற்றையே உபயோகிக்க முயற்சி செய்யலாம். நாம் பயன்படுத்தும் தொழில்நுட்ப முறைகள், தொழில்நுட்ப செயல்பாட்டு முறைகள் ஆகியவற்றைக்கூட அவர்கள் உபயோகிக்க நினைக்கலாம். இதைத் தவிர்க்க முடியாது,” என்றார் திரு சீ.

“ஆனால் நம்பகத்தன்மை கொண்ட நமது முத்தரப்புக் கட்டமைப்பை அப்படியே பின்பற்றுவது பலருக்கு சவாலான ஒன்று,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!