சரிவை எதிர்நோக்கும் அமெரிக்க டாலர்

சரிவை எதிர்நோக்கும் அமெரிக்க டாலர்

1 mins read
e9518baf-d46f-42c0-ba17-62fad6d9c412
சிங்கப்பூர் வெள்ளி 2023ல் அமெரிக்க நாணயத்திற்கு எதிராக 1.5 விழுக்காடு வலுப்பெற்றுள்ளது. - படம் ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: கொவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்க டாலரின் மதிப்பு மோசமான நிலையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திய அமெரிக்க நிதியமைச்சு தற்பொழுது வட்டிவிகிதத்தைக் குறைக்கவுள்ளது.

இதன் விளைவாக சிங்கப்பூர் வெள்ளி 2023ல் அமெரிக்க நாணயத்திற்கு எதிராக 1.5 விழுக்காடு வலுப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு டாலரின் மதிப்பு 1.3395ஆக இருந்து. ஒப்பிடுகையில் ​​வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) காலை நிலவரப்படி அது 1.3189ஆக குறைந்தது.

அமெரிக்க டாலர் நான்காவது காலாண்டில் அதிக வீழ்ச்சி கண்டது. அமெரிக்கப் பொருளியல் மெதுவடைவதால், 2024ல் அமெரிக்க நிதி அமைச்சு வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய வட்டி விகிதத்தை உயர்வாக வைத்திருக்கக்கூடும் என்பதால் டாலரின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்