சிங்கப்பூர் கல்விமுறையில் இந்த ஆண்டுக்கான முன்னுரிமைகள் குறித்து அமைச்சர் சான்

கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாட்டின் கல்விமுறையில் 2024ஆம் ஆண்டுக்கான தமது முன்னுரிமைகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூர் கல்விமுறையில் 2021ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சு முக்கிய மாற்றங்களைச் செய்துவந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் ஆண்டிடைத் தேர்வுகளை ரத்து செய்தது, உயர்நிலைப் பள்ளியில் விரைவுப் பாடத்திட்டம் (எக்ஸ்பிரஸ்), வழக்கநிலைக் (நார்மல்) கல்வி போன்ற தரம் பிரிக்கும் முறைகளை அகற்றியது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வேளையில் அமைச்சர் சான், இந்த ஆண்டுக்கான மூன்று முன்னுரிமைகள் குறித்துக் கூறியுள்ளார்.

முதலாவது முன்னுரிமை, ‘மெயின்ஸ்ட்ரீம்’ பள்ளி முறை, தொடர்ந்து காலத்துக்கு ஏற்றவாறு இருப்பதையும் அக்கறைக்குரிய அம்சங்களை அலட்சியப்படுத்தாமல் இருப்பதையும் உறுதிசெய்வது.

இரண்டாவது, பெரியவர்களுக்கான வாழ்நாள் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல்.

மூன்றாவது, சிறப்புத் தேவையுடையோர்க்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் தொழில்முறை செயல்பாட்டை மேம்படுத்துதல்.

2022ஆம் ஆண்டில் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் சிங்கப்பூர் மாணவர்கள் முன்னிலையில் வந்தபோதும், இது அக்கறைக்குரிய அம்சங்களை கவனிப்பின்றி விட்டுவிடுவதற்கான நேரம் அன்று என்று அமைச்சர் சான் எச்சரித்தார்.

“தொடர்ந்து, நம்மை நாமே விஞ்சுவதில் கவனம் செலுத்த வேண்டும், மற்றவர்களை விஞ்சுவதில் அன்று,” என்றார் அவர்.

அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் திட்டம், அனைத்துலக எழுத்தறிவு ஆய்வில் வளர்ச்சி போன்றவற்றில் சிங்கப்பூர் உன்னத நிலையில் இருக்கிறது. இருப்பினும் கவனமற்ற போக்கால் ‘ஸெராக்ஸ்’ போன்ற வெற்றிகரமான வர்த்தகங்கள் வீழ்ச்சி கண்டதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன என்று திரு சான் கருதுகிறார்.

“உலக அளவில், மற்றவர்கள் பொறாமைப்படக்கூடிய கல்விமுறைகளில் சிங்கப்பூரின் கல்விமுறையும் அடங்கும். நியாயமாக இது நாம் பெருமையாக உணரவேண்டிய அம்சம். இருந்தாலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் இது என்று கூறுவேன்,” என்றார் அவர்.

“சில அம்சங்களில் நாம் சிறப்பாகவே செய்து வருவோம். ஆனால் தொடர்ந்து விழிப்புடன் இல்லாவிட்டால் திடீரென்று காலத்திற்குப் பொருந்தாத நிலையை எதிர்கொள்ள நேரிடும்,” என்று அமைச்சர் சான் கூறினார்.

டிசம்பர் 28ஆம் தேதி புதிய பள்ளி முதல்வர்களின் நியமன நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

தாம் குறிப்பிட்ட இரண்டாவது முன்னுரிமையின் தொடர்பில் பேசிய திரு சான், “கல்விமுறையின் உண்மையான வெற்றி என்பது, மாணவர்கள் தங்கள் வாழ்வின் முதல் 15 ஆண்டுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பதில் இல்லை. அடுத்த 50 ஆண்டுகளில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படிச் செம்மையாக நடத்துகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

வாழ்நாள் கற்றல் தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் முயற்சிகள் குறித்து இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

நிதி ஆதரவு மட்டுமன்றி நேரத்தைத் திட்டமிடுதல், திறன் மேம்பாடு ஆகியவை தொடர்பிலும் கல்வி பயில விரும்பும் பெரியவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.

அமைச்சர் குறிப்பிட்ட மூன்றாவது முன்னுரிமை, சிறப்புத் தேவையுடையோர்க்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் தொழில்முறை செயல்பாட்டை மேம்படுத்துதல்.

அதன் தொடர்பில் பேசிய அவர், தற்போது சிறப்புத் தேவையுடையோர்க்கான பள்ளிகள் ஒருங்கிணைந்த முறையில் செயல்படவில்லை என்றார்.

“கல்வி அமைச்சின் வழக்கமான பள்ளிகளில், ஆசிரியர்களின் வளர்ச்சிக்கான பாதை தெளிவாக இருக்கிறது. போதிய அளவில் பணி மேம்பாட்டு வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. மற்ற பள்ளிகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டாலும் செயல்படும் முறையில் மாற்றம் இல்லை. ஆனால் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கான பள்ளிகளின் நடைமுறை மாறுபட்டது, “ என்று திரு சான் கூறினார்.

மதியிறுக்கம், கற்றல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைகளைக் கொண்ட பிள்ளைகள் அங்கு பயில்வதால் பலதரப்பட்ட சூழல்களை அந்த ஆசிரியர்கள் கையாள்கின்றனர். அவர்கள் தங்கள் தொழில்முறை செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையில் ஆர்வத்துடன் பணியாற்ற முன்வருவர் என்று அமைச்சர் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!