ஹஜ் யாத்திரை: சிங்கப்பூருக்கு ஒதுக்கப்பட்ட 900 இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன

ஹஜ் புனிதப் பயணத்துக்காக சிங்கப்பூருக்கு ஒதுக்கப்பட்ட 900 இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் புனிதப் பயணத்தில் பங்கெடுக்க மேலும் 54,000 பேர் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாண்டு சிங்கப்பூருக்கு 900 இடங்கள் வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) ஜனவரி 8ஆம் தேதியன்று தெரிவித்தது.

புனிதப் பயணத்தில் பங்கெடுக்கத் தேர்வு செய்யப்பட்டோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் முறையை சவூதி அரேபியா முதல்முறையாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தேர்வு செய்யப்பட்டோருக்கு அதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று முயிஸ் தகவல் தெரிவித்தது.

விடுப்புக்கு விண்ணப்பம் செய்வது, தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்த்துக்கொள்ள தேவையான ஏற்பாடுகளைச் செய்வது, மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வது ஆகியவற்றுக்குப் புதிய அணுகுமுறை வகைசெய்வதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 8ஆம் தேதியன்று பதிவிட்டார்.

“ஹஜ் புனிதப் பயணத்தில் பங்கெடுக்க தேர்ந்தெடுக்கப்படாதவர்கள், கவலைப்பட வேண்டாம். சிங்கப்பூருக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்குவது குறித்து சவூதி அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்,” என்றார் அமைச்சர் மசகோஸ்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான திரு மசகோஸ், தற்போது சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருக்கிறார். அங்கு நடைபெறும் ஹஜ், உம்ரா சேவைகளுக்கான மாநாடு மற்றும் கண்காட்சியில் அவர் கலந்துகொள்கிறார்.

2018ஆம் ஆண்டிலிருந்து ஹஜ் புனிதப் பயணத்துக்காக சிங்கப்பூருக்கு ஆண்டுதோறும் 900 இடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் அந்தப் பயணத்துக்காக சிங்கப்பூரிலிருந்து யாரும் அனுப்பப்படவில்லை.

2023ஆம் ஆண்டில் MyHajSg இணையவாசலை முயிஸ் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் நேரில் சென்று பதிவு செய்யத் தேவையில்லாமல் போனது.

அதற்குப் பதிலாக, சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி இணையம் வழி பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

புனிதப் பயணத்துக்குப் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் புனிதப் பயணத்துக்கான செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் புனிதப் பயணத்துக்குச் சென்றவர்கள் கூடுதலாக $1,500 செலுத்த வேண்டி இருந்தது.

புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒருவருக்கான கட்டணம் சராசரியாக $14,150ஆக இருந்தது.

இதில் அவசரநிலை மருத்துவ உதவி, விமானப் பயணச்சீட்டுக்கான கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை.

ஆக மலிவான கட்டணம் $8,490.

அதே சமயம், புனிதப் பயணத்துக்கான விண்ணப்பக் கட்டணம் கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு $240ஆக இருந்தது.

இவ்வாண்டு அது $285ஆக உயர்ந்துள்ளது.

2025ஆம் ஆண்டிறுதி வரை இந்தத் தொகை நீடிக்கும்.

2026ஆம் ஆண்டிலிருந்து விண்ணப்பக் கட்டணம் $330ஆக ஏற்றம் காணும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!