ஜோகூர் ஆர்டிஎஸ் நிலையம் அருகே சொத்து வாங்கும் சிங்கப்பூரர்கள்

ஜோகூர்பாரு: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் (ஆர்டிஎஸ்) நிறைவடைந்ததும் எளிதாக எல்லையைக் கடக்கலாம் என்பதால் ஜோகூர் பாரு ஆர்டிஎஸ் அருகிலுள்ள சொத்துக்களை சிங்கப்பூரர்கள் சிலர் வாங்கி வருகின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் அங்கு வீட்டு விலைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புக்கிட் சகார் ஆர்டிஎஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள சொத்துக்கள், மலேசியா முனையம் அருகேயுள்ள சொத்துகளுக்குத் தேவை அதிகரித்துள்ளது.

ஆர்டிஎஸ் மிகப் பெரிய ஈர்ப்பு என்று ஜோகூர் சொத்துச் சந்தை முகவர் ராயன் கூ சேனல் நியூஸ் ஏஷியாவிடம் கூறினார்.

சிங்கப்பூர்- ஜோகூர் பாரு இடையிலான பயணத்தை ஆர்டிஎஸ் மிகவும் விரைவாக்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10,000 பயணிகளை இருவழிகளிலும் ஏற்றிச் செல்வதன் மூலம், உலகின் பரபரப்பான எல்லைக் கடப்புகளில் ஒன்றான கடற்பாலத்தின் நெரிசலை இது குறைக்கும்.

“ஆர்டிஎஸ் நிலைமையைச் சாதகமாக மாற்றக்கூடியது,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) பொருளியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் திமத்தி வோங் கூறினார்.

“இரு நகரங்களின் பொருளியல்களை மேலும் அணுக்கமாக ஒருங்கிணைக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி இது. ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் (எஸ்இஇசட்) ஆர்டிஎஸ் சிறப்பாகச் செயல்படுகிறது. இது எல்லையைத் தாண்டி மக்களின் நடமாட்டத்தை எளிதாக்குகிறது,” என்றார் அவர்.

புதிய கூட்டுரிமை வீடுகளின் போட்டி இருந்தபோதிலும், அதே பகுதியில் உள்ள பழைய சொத்துகளும் இப்போது வாங்குவோரை ஈர்த்து வருவதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.

அதிகரித்துள்ள தேவையினால் கடந்த ஈராண்டுகளில் முனையத்தின் நடை தூரத்தில் உள்ள சொத்துக்களின் விலைகள் கிட்டத்தட்ட 18 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சொத்துத் தொழில்துறையினர் தெரிவித்தனர். ஈரறை காண்டோமினிய வீடுகள் இப்போது ஏறக்குறைய $240,000 (அமெரிக்க டாலர் $180,000) ஆக உள்ளது.

அலுவலகங்கள், கடைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சொத்து மேம்பாடுகளும் அந்த வட்டாரத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடகை விலைகளும் அதிகரித்துள்ளன. தொற்றுநோய் காலத்துடன் ஒப்பிடும்போது எல்லைக்கு அருகிலுள்ள குடியிருப்புகளின் வாடகை தற்போது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிங்கப்பூர் மக்களிடம் ஜோகூர் சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக சொத்துச் சந்தை முகவர்கள் தெரிவித்தனர்.

வீடு தேடுவோரில் பெரும்பாலானோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அவர்கள் தங்களது ஓய்வுக்காலத் தெரிவுகளைத் திட்டமிடுகின்றனர் என்றும் அவர்கள் கூறினர். வலுவான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு, வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பது ஆகியவை தவிர, ஜோகூர் சிங்கப்பூருக்கு மிக அருகில் இருப்பது ஒரு முக்கிய காரணம் என அவர்கள் சுட்டினர்.

சிலர் ஜோகூர் சொத்துக்களை விடுமுறை இல்லங்களாக அல்லது முதலீட்டு நோக்கங்களுக்காக வாங்குகின்றனர்.

ஜோகூரின் சொத்துச் சந்தைக்கான ஒட்டுமொத்த எதிர்கால வாய்ப்பு நேர்மறையாகவே உள்ளது என்றும், தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சொத்துச் சந்தை முகவர்கள் கருதுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!