நவீன சிங்கப்பூரின் கட்டடக்கலை வடிவமைப்பைப் பாராட்டும் கண்காட்சி

நவீன சிங்கப்பூரின் கட்டடக்கலை வடிவமைப்பைப் பாராட்டும் கண்காட்சி

2 mins read
c7204adb-11a3-4f67-b349-510aa2c57651
வில்லியம் லிம் அசோசியேட்ஸ், டபிள்யூ ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் மொக் வெ வெ.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வில்லியம் லிம் அசோசியேட்ஸ், டபிள்யூ ஆர்க்கிடெக்ட்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூரின் முக்கிய கட்டடக்கலைச் சூழலை வடிவமைப்பதில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பங்கு வகித்துள்ளன.

அந்தப் பங்களிப்பின் முக்கியத்துவம், ‘டு டிரா அன் ஐடியா: ரீடிரேசிங் த டிசைன்ஸ் ஆஃப் வில்லியம் லிம் அசோசியேட்ஸ் - டபிள்யூ ஆர்க்கிடெக்ட்ஸ்’ எனும் கண்காட்சியாக வடிவெடுத்துள்ளது.

இது, இரண்டாம் உலகப் போருக்குமுன் கட்டப்பட்ட கடை வீடுகள் மற்றும் சிங்கப்பூரின் முக்கியக் கட்டடங்களின் வடிவமைப்பைப் பாதுகாக்கும் ஒரு மகத்தான முத்திரையாகும்.

வில்லியம் லிம் அசோசியேட்ஸ் , டபிள்யூ ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனங்களின் வடிவமைக்கும் திறன் எப்படி உருவெடுத்து, நவீன சிங்கப்பூரின் வடிவமைப்புக்குப் பங்களித்துள்ளது என்பதை இந்தக் கண்காட்சி விளக்கும். 

ஒளிவிலகல், பதிலளிப்பு மற்றும் பிரதிபலிப்பு என மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் நிர்வாகப் பொறுப்பை கட்டடக் கலைஞர் ரொனால்ட் லிம் ஏற்றுள்ளார்.

“கலை, இலக்கியம், திரைப்படங்கள் போல நம் சிங்கப்பூர் கட்டடங்களும் நமது கலாசாரத்தின் ஒரு முக்கியப் பகுதி. இத்தகைய கண்காட்சிகள் நமது கட்டடக்கலையை பாராட்டவும் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன,” என்றார் திரு லிம்.

இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் கலைப்பொருள்களுக்கு தேசிய நூலக வாரியம் பொறுப்பு வகிக்கிறது. 

இந்தக் கண்காட்சியை, மேக்ஸ்வெல் சாலையில் உள்ள யூஆர்ஏ மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காணலாம்.  இது ஜூன் 8ம் தேதி நிறைவடையும். மேல் விவரங்கள் அறிய str.sg/pfMY என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்