தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற மூவரை காவல்துறை தேடுகிறது

1 mins read
b5f8d360-8a1a-464f-b1b7-fa6a1cc43dfe
மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற ஓர் ஓட்டுநரையும் இரண்டு பயணிகளையும் காவலர்கள் தேடுகிறார்கள். - படம்: பேஸ்புக் வலைதளம் 

மற்றொரு வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற வாகனத்தின் ஓட்டுநரையும் இரண்டு பயணிகளையும்  காவலர்கள் தேடுகிறார்கள்.

ஃபேரர் சாலையில் நடந்த இச்சம்பவத்தில், விபத்துக்குள்ளான ஒரு சாம்பல் நிற ஹோண்டா காரின் வாகன எண் பலகை தரையில் கிடந்த படங்கள்  பேஸ்புக் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்தன. 

அந்தப் படங்கள் ஒன்றில் வெட்டுக்கத்தி ஒன்று ஓட்டுநரின் கால் வைக்கும் இடத்தில் காணப்பட்டது. 

இச்சம்பவத்தின் தொடர்பாக,  ​​​​இரவு 10.25 மணியளவில் ஆடம் சாலையை நோக்கிச் செல்லும் ஃபேரர் சாலை வழி இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளான செய்தி காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான 61 வயது ஆண் ஓட்டுநர் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்