புகைபிடிப்போர் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும்: தேசிய சுற்றுப்புற வாரியம்

வெளிப்புற இடங்கள், உள்ளிடங்கள் உட்பட கிட்டத்தட்ட 49,000க்கும் மேற்பட்ட இடங்களில் புகைபிடிக்க தற்போது அனுமதி இல்லை.

புகைபிடிப்போர் வெளியிடும் புகையினால், புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படும் இரண்டாம் புகையிலை புகையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, புகைபிடிக்கும் மூலைகள் பொதுவாக உணவங்களின் வெளிப்புற வசதியில் அமைக்கப்படுகின்றன. இது உணவு இடங்களின் மொத்த இடவசதியில் 20 விழுக்காட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2017 ஜூன் முதல் சில்லறை உணவு நிறுவனங்களில் புதிய புகைபிடிக்கும் மூலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை தேசிய சுற்றுப்புற வாரியம் நிறுத்தியுள்ளது. அத்துடன், நிறுவனங்களின் உரிமங்கள் நிறுத்தப்படும்போது அல்லது ரத்து செய்யப்படும்போது இதுபோன்ற புகைபிடிக்கும் மூலைகள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் என்பதையும் அது குறிப்பிட்டது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் கேள்விகளுக்குப் பதில் அளித்த தேசிய சுற்றுப்புற வாரியம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.

“காற்று சுவாசத்துக்குள் செல்லக்கூடிய, 5 மீட்டருக்குள் உள்ள எந்தவொரு பகுதியிலும் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வெளிப்புற சன்னல்கள், வாசல்கள், மற்றும் வணிக, தொழில்துறை அல்லது பொழுதுபோக்கு இடங்கள் அல்லது பொதுமக்கள் செல்லும் எந்தவொரு கட்டடத்தின் நுழைவாயில் ஆகிய இடங்களில் புகைபிடிக்கத் தடை உள்ளது,” என்று வாரியத்தின் இணையத்தளம் குறிப்பிட்டது.

குப்பை போடுவது உட்பட குற்றங்கள் புரியும் புகைபிடிப்பவர்களுக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து, அமலாக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது. தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்ததற்காக 2023ல் 14,600க்கும் மேற்பட்ட அபராதக் கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

எனினும், குடியிருப்புப் பேட்டைகளிலும் நகர மையங்களிலும் உள்ள திறந்தவெளிப் பகுதிகள் போன்ற குறிப்பிட்ட சில பகுதிகளில் புகைபிடிக்க அனுமதி உண்டு.

“புகைபிடிக்கும் விதிமுறைகளின் கீழ் தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடிக்காதவரை, தற்காலிக புகைபிடிக்கும் இடங்களுக்கு எந்த தடையும் இல்லை,” என்று வாரியம் குறிப்பிட்டது.

புகைபிடிப்பவரின் வெளிவிடும் புகைக்கு பாதுகாப்பான அளவு வெளிப்பாடு இல்லை என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையத்தின் (யுஎஸ் சிடிசி) குறிப்பிட்டுள்ளது.

அப்புகையைச் சுவாசிக்கும் பெரியவர்களுக்கு இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், பிற நோய்களும் ஏற்படலாம். இது அகால மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

சிகரெட் புகையை சுவாசிப்பதால் பிறக்கும் குழந்தைகளின் எடை குறைவாக இருப்பது உட்பட, பெண்களுக்கு எதிர்மறையான இனப்பெருக்க ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் யுஎஸ் சிடிசியின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு சுவாச நோய்த்தொற்றுகள், காது நோய்த்தொற்றுகள், ஆஸ்துமா நோய் தாக்குதல்கள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு திடீர் மரணமும் ஏற்படலாம்.

அப்பர் சிராங்கூன் கிரசண்ட் காப்பி கடைக்கு அருகிலுள்ள தற்காலிக புகைபிடிக்கும் மூலையைப் பற்றி ‘கம்ப்ளெய்ன்ட் சிங்கப்பூர் ஃபேஸ்புக் குழும’த்தில் இடம்பெற்ற புகாரைத் தொடர்ந்து, பெண்டமியர், பிடோக், சைனா டவுன், புக்கிட் பாஞ்சாங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 காப்பி கடைகளுக்கும், அப்பர் சிராங்கூன் கிரசெண்ட் காப்பி கடைக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றது.

அது சென்ற கிட்டத்தட்ட அனைத்து காப்பி கடைகளுக்கும் அருகில் தற்காலிக புகைபிடிக்கும் மூலைகள் காணப்பட்டன. சில கூரை உள்ள நடைபாதைக்கு மிக அருகே இருந்தன.

இந்த மூலைகளில் பிளாஸ்டிக் நாற்காலிகள், பெஞ்சுகள், அவ்வப்போது மடிக்கக்கூடிய மேசைகளால் குறிக்கப்பட்டிருந்தன. உச்ச நேரமில்லாதபோதும், அந்த பகுதிகளில் புகைபிடிப்போர் அங்கு அமர்ந்து புகைபிடிப்பதை சில நேரங்களில் காண முடிந்தது. உச்ச நேரங்களில், இந்த மூலைகள் சிலவற்றில் பெரிய குழுக்கள் புகைபிடிப்பதைக் காண முடிந்தது.

பல்வேறு பகுதிகளில் உள்ள தற்காலிக புகைபிடிக்கும் மூலைகளில் சிகரெட் துண்டுகள், காலி சிகரெட் பாக்கெட்டுகள், சிகரெட் பாக்கெட்டுக்குள் இருக்கும் காகிக குப்பைகள் இருப்பதைக் காண முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

“பொது இடங்களில் புகைபிடிக்கும்போது சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவும், தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடிக்காமல் இருக்கவும் புகைபிடிப்பவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்று தேசிய சுற்றுப்புற வாரியம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

“தற்காலிக புகைபிடிக்கும் மூலைகளை அமைக்க அனுமதிக்கும்போது வளாகத்தின் உரிமையாளர்களும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்,” என்றும் அது கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!