சுத்தமின்மை காரணமாக கேஜி கேட்டரிங்கிற்கு எதிராக மீண்டும் நடவடிக்கை

சுத்தமின்மை காரணமாக கேஜி கேட்டரிங்கிற்கு எதிராக மீண்டும் நடவடிக்கை

1 mins read
14ff41db-148e-444b-bf0d-c67d0cac28c2
கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக கேஜி கேட்டரிங் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - படம்: இணையம்

உணவு தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனமான கேஜி கேட்டரிங்கின் உரிமம் ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓராண்டுக்குள் 12 குற்றப் புள்ளிகளைப் பெற்றதால் அதற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த நிறுவனத்துக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

கேஜி கேட்டரிங் நிறுவனம் 171 கம்போங் அம்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

உணவு தயாரிக்கும் இடத்தை அது சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறியதற்கும் அங்கு தயாரித்த உணவுவகைகளை விற்பனை செய்ததற்கும் அந்நிறுவனத்துக்கு மொத்தம் 12 தண்டப் புள்ளிகள் விதிக்கப்பட்டன.

கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக கேஜி கேட்டரிங் நிறுவனத்துக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்