தைவானில் அழகு நிலையத்தில் சட்டவிரோதமான பாலியல் சேவைகளை பெற்ற சிங்கப்பூரர் கைது

1 mins read
e6bf3c22-cf90-4961-9995-2aa6a0297141
தைவானுக்கு வர்த்தக ரீதியான பயணமாகச் சென்ற 49 வயது சிங்கப்பூரர் ஒருவர், அழகு நிலையத்தில் பாலியல் சேவைகளை ஆதரித்ததற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.  -  படம்: கௌஷியோங் காவல்துறை

தைப்பே: தைவானுக்கு வர்த்தக ரீதியான பயணமாகச்  சென்ற 49 வயது சிங்கப்பூரர் ஒருவர், அழகு நிலையத்தில் பாலியல் சேவைகளை ஆதரித்ததற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டார். 

காவல்துறையினர், அங்கு ஜனவரி 30ஆம் தேதியன்று சோதனை நடத்தியபோது அவர் கைது செய்யப்பட்டார்.

தெற்கு நகரமான கௌஷியோங்கில் உள்ள டத்தோங் ஒன்றாவது சாலையில் அமைந்துள்ள அந்த அழகு நிலையத்தில், சட்டவிரோதமாக வர்த்தக பாலியல் சேவைகள் வழங்கப்படுவதாக காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.   

அதைத் தொடர்ந்து,  உள்ளூர் காவல்துறையினர் அந்த இடத்தைச் சோதனையிட்டனர்.

பிற்பகல் 2.40 மணியளவில் நடந்த சோதனையின்போது, அந்த அழகு நிலையத்தில்  சிங்கப்பூரரான ஹோ, 42 வயதுப் பெண்மணியுடன் தனியறையில் இருந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது. 

உள்ளூர் மக்கள் ஹோவிற்கு இந்த இடத்தை அறிமுகம் செய்ததால், அவர் அங்கு சேவைகளை நாடினார் என்றும் தெறிவித்தது . 

ஹோவைத் தவிர, இரண்டு சலூன் ஊழியர்களையும், இரண்டு தைவானிய ஆண் வாடிக்கையாளர்களையும்  அதே சோதனையின்போது காவல்துறை கைது செய்தது.

இக்குற்றத்தில் ஈடுபட்ட  மூன்று பெண் ஊழியர்கள், 40 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள். 

அவர்கள்  வியட்னாம்  நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால் தைவானில் தங்குகிறார்கள் என்று தைவான் செய்தி ஊடகம் அறிவித்துள்ளது. 

அழகு நிலையத்தை நடத்தி வந்த லின், 33,  என்ற மற்றொருவரும்  கைது செய்யப்பட்டார்.

அவர், அப்பெண்களுக்கு முகவராகச் செயல்பட்டதாகவும், அவர்களுக்குக்  கிடைக்கும்  NT$1,800 (S$77) கட்டணத்திலிருந்து பாதியைத் தரகுப் பணமாக அந்த ஆடவர் பெற்றதாகவும் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்